சோளியை முடித்த பஞ்சாப்! 5 தொடர் தோல்விகளால் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்

MI vs PBKS
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் மார்ச் 13-ஆம் தேதி நடைபெற்ற 23-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புனே எம்சிஏ மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் மயங்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இணைந்து அதிரடியாக ரன்கள் குவித்தனர். ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட அனைத்து மும்பை பவுலர்களையும் பிரித்து மேய்ந்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக 97 ரன்கள் குவித்த போது கேப்டன் மயங்க் அகர்வால் 32 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

dhawan

- Advertisement -

அதை தொடர்ந்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ 12 (13) ரன்கள் எடுத்து அவுட்டாக அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் லியம் லிவிங்ஸ்டனை வெறும் 2 ரன்களில் பும்ரா கிளீன் போல்டாக்கினார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அபாரமாக செயல்பட்ட மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் நங்கூரமாக 50 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 70 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அசத்திய பஞ்சாப்:
கடைசியில் தமிழக வீரர் ஷாருக்கான் 6 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 15 ரன்கள் எடுக்க மற்றொரு இளம் வீரர் ஜிதேஷ் சர்மா 15 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 30* ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார். இதனால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்த பஞ்சாப் 198/5 ரன்களை குவித்தது. மும்பை சார்பில் அதிகபட்சமாக பேசில் தம்பி 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 199 என்ற நல்ல இலக்கை துரத்திய மும்பைக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக வெறும் 17 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 28 ரன்கள் எடுத்து நம்பிக்கை கொடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் களமிறங்கி தடுமாறிக் கொண்டிருந்த இஷான் கிசான் 3 (6) ரன்களில் நடையை கட்டியதால் 32/2 என ஆரம்பத்திலேயே மும்பை தடுமாறியது.

- Advertisement -

மும்பை போராடி தோல்வி:
அந்த நிலையில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா இளம் அண்டர்-19 வீரர் தேவாலட் ப்ரேவிஸ் அதிரடியாக சிக்சர்களை வெளுத்து வாங்கினார். குறிப்பாக ராகுல் சஹர் வீசிய ஒரே ஓவரில் 4 சிக்சர்களை பறக்க விட்ட அவர் திலக் வர்மாவுடன் இணைந்து 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்து மும்பையை மீட்டெடுக்க போராடினார். ஆனால் 25 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட 49 ரன்கள் எடுத்து அரை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட அவர் அவுட்டானதும் அடுத்த ஒருசில ஓவர்களிலேயே 20 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 36 ரன்கள் எடுத்த திலக் வர்மாவும் ரன் அவுட்டானார்.

pollard 1

அந்த இக்கட்டான நிலைமையில் களமிறங்கிய கைரன் பொல்லார்ட் 10 (11) ரன்களில் ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க அவருடன் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் உட்பட வெற்றிக்காக கடைசி நேரத்தில் தனி ஒருவனாக போராடி 43 ரன்களில் அவுட்டானார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 186/9 ரன்களை மட்டுமே எடுத்த மும்பை போராடி தோல்வியடைந்தது. பஞ்சாப் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஓடின் ஸ்மித் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

மும்பை வரலாற்று தோல்வி:
இதன் காரணமாக வெறும் 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பஞ்சாப் இந்த வருடம் பங்கேற்ற 5 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் இந்த போட்டிக்கு முன்பாக ஏற்கனவே தனது முதல் 4 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளால் கடைசி இடத்தில் திண்டாடிய மும்பை இந்த போட்டியில் கட்டாயம் வென்றே தீரவேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது.

Mumbai Indians MI

ஆனால் அதற்கேற்றார்போல் விளையாடாத அந்த அணி மீண்டும் சொதப்பி 5-வது தொடர் தோல்வியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 10-வது இடத்தில் மீண்டும் திண்டாடுகிறது. ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என்ற சாதனை படைத்துள்ள மும்பை இப்படி 5 தொடர் தோல்விகளை பதிவு செய்ததால் ஐபிஎல் வரலாற்றில் 2 முறை ஒரு சீசனில் 5 தொடர் தோல்விகளை பதிவு செய்த முதல் அணி என்ற வரலாற்றில் மோசமான சாதனையை படைத்துள்ளது.

- Advertisement -

ஆம் கடந்த 2014-ஆம் ஆண்டு இதே போல தனது முதல் 5 போட்டிகளில் தொடர் தோல்வியடைந்த அந்த அணி 2022இல் மீண்டும் அதே போன்ற 5 தொடர் தோல்விகளை பதிவு செய்து இந்த மோசமான சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 5 தொடர் தோல்விகளை பதிவு செய்த அணிகள்:
1. மும்பை இந்தியன்ஸ் : 2014, 2022*
2. பெங்களூரு (2019), டெல்லி (2013), டெக்கான் சர்ஜர்ஸ் (2012)

இதையும் படிங்க : நம்ம தினேஷ் கார்த்திக்கை போல எதிரணிக்கு டஃப் கொடுக்கும் இளம் வீரர், குவியும் பாராட்டு – யாருப்பா அது?

இருப்பினும் அதே 2014இல் அதன்பின் மீண்டெழுந்த மும்பை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று பைனலுக்கு முன்னேறி நிகழ்த்திய மேஜிக்கை இந்த வருடம் மீண்டும் அந்த அணி நிகழ்த்தும் என அந்த அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் காணப்படுகின்றனர்.

Advertisement