தீபக் சாஹருடன் சேர்ந்து அடுத்த சீசன் மாஸ் காட்டப்போகும் இளம் வீரர் – கெத்தான சாதனை, ரசிகர்கள் ஹேப்பி

Mukesh
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மே 12-ஆம் தேதி நடைபெற்ற 59-ஆவது லீக் போட்டி பல சர்ச்சைக்கு மத்தியில் ஒரு வழியாக நடைபெற்று முடிந்தது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு டேவோன் கான்வே முதல் ஓவரிலேயே எல்பிடபிள்யூ முறையில் கோல்டன் டக் அவுட்டானர். அதை ரிவியூ செய்யக்கோரிய அவரிடம் பவர்கட் என்பதால் ரிவியூ செய்ய முடியாது என்று அம்பயர் கூறியது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.

MS Dhoni Finisher

- Advertisement -

மொத்தம் 2.4 ஓவர்கள் வரை அதே நிலைமை நீடித்ததால் அதற்கிடையில் ராபின் உத்தப்பா 1 ரன்னில் அதே மாதிரியான சந்தேகமான எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி சென்றார். அதன்பின் அம்பத்தி ராயுடு, மொய்ன் அலி, ஷிவம் துபே உட்பட எஞ்சிய முக்கிய பேட்ஸ்மேன்களும் மும்பையின் அதிரடியான தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பியதால் அந்த அணி 50 ரன்களை தாண்டாது என அனைவரும் நினைத்தனர்.

வெளியேறிய சென்னை:
நல்லவேளையாக கேப்டன் தோனி தனி ஒருவனை போல 36* (33) ரன்கள் எடுத்தாலும் இதர வீரர்கள் வரிசையாக பெவிலியன் திரும்பியதால் 16 ஓவரில் சென்னை 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை 14.5 ஓவரில் 103/5 எடுத்து வெற்றிகரமாக சேசிங் செய்த மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த வருடம் பங்கேற்ற 12 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்தது. மறுபுறம் பங்கேற்ற 12 போட்டிகளில் 8-வது தோல்வியை பதிவு செய்த சென்னை மும்பையைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக 2-வது அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது.

MI vs CSK 2

அதனால் 2020க்கு பின் மீண்டும் வரலாற்றில் 2-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் அவமானத்தை சந்தித்துள்ள சென்னை நடப்புச் சாம்பியனாக இருந்த போதிலும் கோப்பையை தக்க வைக்கும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்த போட்டியில் மோசமான அம்பயரிங், பவர் கட் சதி, மோசமான பேட்டிங் என பல அம்சங்கள் சென்னையின் தோல்விக்கு வெளிப்படையாக முக்கிய பங்காற்றியது.

- Advertisement -

மிரட்டிய சவுத்ரி:
இருப்பினும் 97 ரன்களுக்கு ஆல் அவுட்டான சென்னை பந்துவீச்சில் மும்பையை எளிதாக சேசிங் செய்யவிடாமல் 5 விக்கெட்டுகளை எடுத்து போராடி தோல்வியடைந்தது ரசிகர்களின் பாராட்டை பெற்றது. குறிப்பாக இஷான் கிசான் 6 (5) டேனியல் சாம்ஸ் 1 (6) த்ரிசன் ஸ்டப்ஸ் 0 (1) என 3 வீரர்களை பவர்பிளே ஓவர்களில் மிரட்டலாக பந்துவீசிய இளம் சென்னை பவுலர் முகேஷ் சவுத்ரி மும்பைக்கு கடும் சவாலை கொடுத்து சென்னையின் வெற்றிக்கு போராடினார். இவர் ஏற்கனவே இந்த வருடம் மும்பைக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியின்போது முதல் ஓவரிலேயே இஷான் கிசான் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை முதல் ஓவரிலேயே கோல்டன் டக் அவுட் செய்து மிரட்டினார்.

Mukesh Chowdry

இந்த வருடம் 14 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட தீபக் சஹர் காயத்தால் ஆரம்பத்திலேயே விலகியதாலும் வேறு நல்ல தரமான இந்திய பவுலர் இல்லாத காரணத்தாலும் வேறு வழியின்றி இந்த இளம் முகேஷ் சவுத்ரிக்கு சென்னை அணி நிர்வாகம் வாய்ப்பளித்தது. அதில் முதல் ஒருசில போட்டிகளில் ரன்களை வாரி வழங்கினாலும் அதன்பின் தன்னை தானே மெருகேற்றிக் கொண்ட அவர் சமீபத்தைய போட்டிகளில் ப்வர்ப்ளே ஓவர்களில் பட்டாசாக பந்து வீசி வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக இடதுகை பந்துவீச்சாளராக எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் அவர் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர் என்ற சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. முகேஷ் சவுத்ரி : 11*
2. முஹம்மது ஷமி : 10
3. ககிஸோ ரபாடா/உமேஷ் யாதவ் : 8

இப்படி ஷமி, ரபாடா போன்ற நட்சத்திர பவுலர்களை காட்டிலும் பவர்ப்ளே ஓவர்களில் அபாரமாக பந்து வீசி வரும் இவர் ஐபிஎல் 2022 தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட பந்துவீச்சாளர் என்ற சாதனையும் படைத்துள்ளார். அந்தப் பட்டியல் இதோ:
1. முகேஷ் சவுத்ரி :16*
2. உம்ரான் மாலிக் : 15
3. மோசின் கான் : 10

இதையும் படிங்க : மும்பையை பார்த்தாலே கைகால் உதறும் சென்னை ! சிஎஸ்கே ரசிகர்கள் விரும்பாத நிஜமான பரிதாப புள்ளிவிவரங்கள்

மாஸ் காட்டுவாரு:
ஏற்கனவே ஒரு சீசனில் பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக சாதனை படைத்துள்ள தீபக் சஹர் பவர் பிளே ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படுகிறார். எனவே இந்த வருடம் அவரின் இடத்தில் அவரைப் போலவே அசத்தலாக செயல்பட்டு உள்ள முகேஷ் சவுத்ரி அடுத்த வருடம் தீபக் சஹர் வந்தால் அவருடன் கைகோர்த்து மாஸ் காட்டும் பவுலராக சென்னையின் பந்து வீச்சை பலப்படுத்துவார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement