மும்பையை பார்த்தாலே கைகால் உதறும் சென்னை ! சிஎஸ்கே ரசிகர்கள் விரும்பாத நிஜமான பரிதாப புள்ளிவிவரங்கள்

Pollard 1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் மே 13-ஆம் தேதி நடைபெற்ற 59-வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய சென்னைக்கு முதல் ஓவரிலேயே டேவோன் கான்வே கோல்டன் டக் அவுட்டாகி ரிவியூ எடுக்க முயன்ற போது மைதானத்தில் பவர்கட் இல்லை என்பதால் ரிவ்யூ எடுக்க முடியாது என்று அம்பயர் தெரிவித்தது அதிர்ச்சியை கொடுத்தது.

MS Dhoni vs MI

- Advertisement -

அதேபோல் ராபின் உத்தப்பாவும் 1 ரன்னில் அவுட்டாகி செல்ல மொய்ன் அலி, அம்பத்தி ராயுடு போன்ற இதர முக்கிய வீரர்களும் மும்பையின் அதிரடியான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வரிசையாக தங்களது விக்கெட்டுகளை பரிசளித்தனர். அதனால் 50 ரன்களைக் கூட தாண்டாது என எதிர்பார்த்த சென்னையை நல்லவேளையாக கேப்டன் தோனி 36* (33) ரன்கள் எடுத்து காப்பாற்றினாலும் 16 ஓவர்களில் அந்த அணி 97 ரன்களுக்கு சுருண்டது. அதை தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு 5 விக்கெட்டுகளை எடுத்து சென்னை நெருக்கடி கொடுத்த போதிலும் 14.5 ஓவரில் 103/5 ரன்களை எடுத்த அந்த அணி வெற்றி பெற்றது.

வெளியேறிய சென்னை:
ஏற்கனவே 8 தொடர் தோல்விகளால் மும்பை அதிகாரப்பூர்வமாக முதல் அணியாக வெளியேறிய நிலையில் கொஞ்சம் நம்பிக்கையுடன் சுற்றி வந்த சென்னையையும் இப்போட்டியில் தோற்கடித்து லீக் சுற்றுடன் 2-வது அணியாக அதிகாரப்பூர்வமாக வெளியேற்றி ஆறுதலடைந்தது. இந்த வருடம் ஆரம்பத்திலேயே தீபக் சஹர் காயத்தால் விலகிய நிலையில் தேவையின்றி ரவிந்திர ஜடேஜாவிடம் கேப்டன் பதவியை கொடுத்து அதில் அவர் சொதப்பி மீண்டும் கேப்டன்சிப் பதவி பெற்றுக்கொண்ட எம்எஸ் தோனி எடுத்த தவறான முடிவு சென்னையின் இந்த வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

MI vs CSK 2

கடந்த 2008 முதல் குறைந்தது பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற வந்த ஒரே அணியாக சாதனை படைத்த சென்னை கடந்த 2020இல் முதல் முறையாக நாக்அவுட் சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் அவமானத்தைச் சந்தித்தது. அதன்பின் இப்போது மீண்டும் வரலாற்றில் 2-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் மீண்டும் ஒரு அவமானத்தை சென்னை எதிர்கொண்டுள்ளது. அதைவிட பரம எதிரியான மும்பையிடம் நேற்று பரிதாபமாக தோல்வி அடைந்த விதம் சென்னை ரசிகர்களிடையே சோகமடைய வைத்துள்ளது.

- Advertisement -

கைகால் உதறல்:
ஐபிஎல் தொடங்கப்பட்ட ஆரம்ப காலகட்டங்களில் சச்சின் தலைமையிலான மும்பையை தோனி தலைமையிலான சென்னை அசால்டாக தோற்கடித்து வந்தது. ஆனால் எப்போது ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றாரோ அப்போது முதல் அந்த அணியை பார்த்தாலே கைகால் உதறுவது போல சென்னை தோல்வியடைந்து வருகிறது.

CSKvsMI

1. நேற்றைய போட்டியில் பவர்பிளே ஓவரில் 5 விக்கெட்களை இழந்த சென்னை ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் 3 முறை மட்டுமே பவர்பிளே ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஆச்சரியப்படும் வகையில் அந்த 3 போட்டிகளும் (2020, 2021, 2022*இல்) மும்பைக்கு எதிரானதாகும்.

- Advertisement -

2. நேற்றைய போட்டியில் 97 ரன்களுக்கு சுருண்ட சென்னை தனது 2-வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. அந்த அணியின் டாப் 5 குறைந்தபட்ச ஸ்கோர்களில் 3 மும்பைக்கு எதிரானதாகும். அந்த விவரம் இதோ:
1. 79 ஆல் அவுட் – மும்பைக்கு எதிராக, 2013
2. 97* ஆல் அவுட் – மும்பைக்கு எதிராக, 2022*
3. 109 ஆல் அவுட் – ராஜஸ்தானுக்கு எதிராக, 2008
4. 109 ஆல் அவுட் – மும்பைக்கு எதிராக, 2019

MI vs CSK

3. மேலும் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் இதர அணிகளுக்கு எதிராக சென்னை வெறும் 4 போட்டிகளில் மட்டுமே ஆல் அவுட்டானது. ஆனால் மும்பைக்கு எதிராக மட்டும் கைகால் நடுங்கியது போல் 5 முறை ஆல் அவுட்டாகியுள்ளது.

- Advertisement -

4. குறிப்பாக 2010க்கு பின்பு இதுவரை 6 போட்டிகளில் மட்டுமே சென்னை ஆல் அவுட்டாகியுள்ளது. அதில் 5 முறை ஆல் அவுட்டாகி மும்பையிடம் சரணடைந்துள்ளது. பஞ்சாப்க்கு எதிராக 1 முறை மட்டும் ஆல் அவுட்டானது.

Csk-vsMi

5. அதைவிட ஐபிஎல் வரலாற்றில் இவ்விரு அணிகள் மோதிய முதல் 19 போட்டிகளில் சென்னை 10 முறையும் மும்பை 9 முறையும் வென்றன. ஆனால் அடுத்த 15 போட்டிகளில் அதாவது சமீப காலங்களில் சென்னை 4 முறை மட்டுமே வென்றது. மும்பை 9 முறை வென்று சென்னையை ஆள்கிறது.

6. இது கூட பரவாயில்லை. சென்னையின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகளில் எதிர்கொண்ட மும்பை 5 முறை வென்றது. 2 போட்டிகளில் மட்டுமே தோற்றது. அந்த 2 போட்டிகளில் சச்சின் தலைமையிலான மும்பையை சென்னை தோற்கடித்ததாகும்.

இதையும் படிங்க : இந்திய அணிக்காக இவர் சீக்கிரம் 3 விதமான கிரிக்கெட்டிலும் ஆடுவாரு – 19 வயது வீரரை புகழ்ந்த ரோஹித் சர்மா

7. ரோகித் சர்மா கேப்டனாக வருவதற்கு முன்புவரை 2 கோப்பைகளை வென்றிருந்த சென்னை அதன்பின் 2 கோப்பைகளை மட்டும் வென்றது. ஆனால் அதன்பின் மும்பை 5 கோப்பைகளை வென்றுள்ளது. அதிலும் 2013, 2015, 2019 ஆகிய 3 கோப்பைகளை இறுதிப்போட்டியில் சென்னை மண்ணை கவ்வ வைத்து மும்பை முத்தமிட்டது. இவை அனைத்தும் பார்க்கும்போது மும்பையை பார்த்தாலே சென்னை கைகள் நடுங்குகிறது என்றும் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

Advertisement