ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2024 சீசனில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 11 போட்டிகளில் 6 வெற்றியும் 5 தோல்வியும் பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல அடுத்து வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முன்னதாக இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் தோனி ஒப்படைத்தார்.
அதனால் சாதாரண விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடும் அவர் 42 வயதை கடந்து விட்டதால் கடைசி சில ஓவர்களில் மட்டும் பேட்டிங் செய்து வருகிறார். அந்த வகையில் இந்த வருடம் முதல் 7 போட்டிகளில் ஒரு முறை கூட அவுட்டாகாமல் அற்புதமான ஃபினிஷிங் கொடுத்த அவர் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய ரன்களை எடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
பி சிஎஸ்கே அணி:
அதே போல பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ஓவர்கள் அதிகமாக இருந்ததால் கேரியரிலேயே முதல் முறையாக தோனி 9வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார். ஆனால் அந்தப் போட்டியில் கோல்டன் டக் அவுட்டான அவர் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் சிஎஸ்கே அணிக்கு பின்னடைவையும் கொடுத்தார். அதனால் தோனி முன்கூட்டியே பேட்டிங் செய்ய வரவேண்டும் என்று இர்பான் பதான் விமர்சித்தார்.
அத்துடன் 9வது இடத்தில் பேட்டிங் செய்வதாக இருந்தால் அதற்கு தோனி வராமலேயே இருக்கலாம் என்று ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் கடந்த வருடம் முழங்காலில் காயத்தை சந்தித்த தோனி அதற்கு சிகிச்சை எடுத்ததை அனைவரும் அறிவோம். இருப்பினும் தற்போது தோனி தம்முடைய காலில் தசை நார் கிழிந்து காயத்தை சந்தித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அதற்காக வலி நிவாரணிகள் மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வலியை குறைத்துக் கொண்டு தோனி விளையாடி வருவதாக செய்திகள் தெரிவிக்கிறது. அதனால் தோனியால் வேகமாக ஓட முடியாது என்பதும் தெரிகிறது. அதனாலேயே அவர் கடைசி 2 ஓவரில் மட்டும் பேட்டிங் செய்யும் முடிவை எடுத்துள்ளதாகவும் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் டேரில் மிட்சேலை திருப்பி அனுப்பியதாகவும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: தோனியை புகழ்ந்தா பிடிக்காது.. அப்போ பழியை கம்பீர் மேல போடுவீங்களா? ரசிகரை விளாசிய இயன் பிஷப்
மேலும் 2வது விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்ட டேவோன் கான்வே காயமடைந்து வெளியேறியதால் தோனி வேறு வழியின்றி தொடர்ந்து விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்தெரிகிறது. அத்துடன் பதிரனா, ரஹ்மான் போன்ற முக்கிய வீரர்கள் விலகியதால் சென்னை பி அணியுடன் விளையாடி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத சிஎஸ்கே நிர்வாகி கூறியது பின்வருமாறு. “நாங்கள் கற்பனையாக எங்களுடைய பி அணியுடன் விளையாடி வருகிறோம். தோனியைப் பற்றி விமர்சிப்பவர்களுக்கு அணிக்காக அவர் செய்யும் தியாகம் தெரியாது” என்று கூறினார்.