இந்திய அணிக்காக இவர் சீக்கிரம் 3 விதமான கிரிக்கெட்டிலும் ஆடுவாரு – 19 வயது வீரரை புகழ்ந்த ரோஹித் சர்மா

rohith
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 59-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய மும்பை அணியானது தங்களது அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி 16 ஓவர்களில் சென்னை அணியை 97 ரன்களில் சுருட்டியது. பின்னர் 98 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தாலும் திலக் வர்மா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

MI vs CSK 2

- Advertisement -

இதன் காரணமாக 14.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 32 பந்துகளில் 34 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். போட்டியின் ஆட்ட நாயகனாக டேனியல் சாம்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் கூறுகையில் :

இந்த ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே நாங்கள் சென்னை அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தியது எங்களுக்கு முன்னிலையை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக விக்கெட்டுகளை நாங்கள் வீழ்த்தியதால் சென்னை அணியால் மிடில் ஓவர்களில் பெரிய அளவு ரன்களை குவிக்க முடியவில்லை. எங்களுடைய அணி வீரர்கள் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதுபோன்ற மைதானத்தில் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை எடுக்கும்போது எதிரணியின் ரன் குவிப்பை தடுக்க முடியும்.

Tilak Varma

அந்த வகையில் எங்களது பந்து வீச்சாளர்கள் சென்னை அணியை இவ்வளவு குறைவான ரன்களுக்குள் சுருட்டியதை எதிர்பார்க்க வில்லை. இருப்பினும் எங்கள் அணியின் பந்துவீச்சு அசத்தலாக இருந்தது. நாங்கள் இனி வரும் போட்டிகளில் நிறைய மாற்றங்களை எதிர்காலத்திற்காக செய்ய நினைத்துள்ளோம். அதன்படி இந்த போட்டியிலும் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலும் குறிப்பாக திலக் வர்மா இந்த ஆண்டு மும்பை அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

இது தான் அவருடைய முதல் ஆண்டு ஐபிஎல் தொடர் என்றாலும் இப்போது அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். இக்கட்டான சூழலிலும் அவரது பேட்டிங் மிகவும் அட்டகாசமாக இருக்கிறது. நிச்சயம் அவர் இந்திய அணிக்காக மூன்று விதமான வடிவங்களிலும் வெகுவிரைவில் விளையாடுவார். அந்த அளவிற்கு அவரிடம் திறனும் முன்னேற்றமும் இருக்கிறது என்று திலக் வர்மாவை ரோஹித் சர்மா புகழ்ந்து பேசினார்.

இதையும் படிங்க : அப்போ 15,000 கோடி என்னாச்சு ! உலக அளவில் காற்றில் பறந்த மானம், பிசிசிஐயை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

19 வயதான திலக் வர்மா உள்ளூர் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருபவர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட அவர் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 368 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement