அப்போ 15,000 கோடி என்னாச்சு ! உலக அளவில் காற்றில் பறந்த மானம், பிசிசிஐயை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

Ganguly-ipl
IPL MI
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் பல எதிர்பாராத திருப்பங்களுடன் மும்பை நகரில் கோலாகலமாக ஒரு மாதங்களை கடந்து உச்சகட்ட பரபரப்பில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் எவ்வளவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதோ அதற்கு ஈடாக ஒருசில சர்ச்சையான நிகழ்வுகளும் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக சரியான தீர்வுகளை வழங்க வேண்டிய அம்பயர்கள் இடுப்புக்கு மேல் போட்டாலும் நோ பால் இல்லை என அறிவிப்பது உட்பட பல குளறுபடியான தீர்ப்புகளை வழங்கி வருவது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த வரிசையில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற மும்பை – சென்னை அணிகள் மோதிய போட்டி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

MI vs CSK

- Advertisement -

அப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய சென்னைக்குமுதல் ஓவரிலேயே டேவோன் கான்வே எல்பிடபிள்யூ முறையில் கோல்டன் டக் அவுட்டானார். இருப்பினும் அது பிட்ச்சிங் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் என்பதால் அவுட்டில்லை என உணர்ந்த உடனடியாக ரிவ்யூ செய்ய அம்பயரிடம் கூறினார்.

பவர் கட்:
ஆனால் மைதானத்தில் பவர் கட் என்பதால் ரிவ்யூ செய்ய முடியாது என்று அம்பயர் தெரிவித்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் முன்னாள் வீரர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. மொத்தமாக 2.4 ஓவர்கள் அதே நிலைமை தொடர்ந்ததால் அதற்குள் ராபின் உத்தப்பாவும் எல்பிடபிள்யூ முறையில் சந்தேகமாக அவுட்டாகி சென்றார். அதனால் போட்டியில் ஆரம்பத்திலேயே மிகப் பெரிய பின்னடைவை சென்னை சந்தித்த நிலையில் மொய்ன் அலி, அம்பத்தி ராயுடு போன்ற இதர வீரர்களும் மும்பையின் அபாரமான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வந்த வழியே திரும்பினார்கள்.

MS Dhoni vs MI

அதனால் 50 ரன்களைக் கூட தாண்டாது என கருதப்பட்ட சென்னையை ஒரு வழியாக கேப்டன் தோனி 36* ரன்கள் அடித்து காப்பாற்றிய போதிலும் 97 ரன்களுக்கு சுருண்டது. அதை துரத்திய மும்பைக்கு 5 விக்கெட்டுகளை எடுத்து சென்னை நெருக்கடி கொடுத்த போதிலும் மோசமான அம்பயரிங், பவர்கட் போன்ற் துரதிஷ்டவசமான நிகழ்வுகளால் பரிதாபமாக தோற்றது. அதனால் ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுடன் 2-வது அணியாக அதிகாரபூர்வமாக வெளியேறிய சென்னை 2020க்கு பின் வரலாற்றில் 2-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாத பரிதாபத்தை சந்தித்தது.

- Advertisement -

15,000 கோடி:
கடந்த 2008-ஆம் ஆண்டில் 8 அணிகளுடன் சாதாரண 20 ஓவர் தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு வருடமும் தன்னைத்தானே மெருகேற்றி கொண்டு தரத்திலும் பணத்திலும் பன்மடங்கு உயர்ந்து இன்று உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நம்பர் 1 டி20 தொடராக ஜொலிக்கிறது. இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று எதிர்பாராத திரில்லர் திருப்பங்களை கொடுப்பதால் ஐசிசி நடத்தும் உலக கோப்பையை விட ஐபிஎல் மிகச்சிறந்த தொடர் என்று ஜாம்பவான்கள் சுனில் கவாஸ்கர், ஏபி டிவில்லியர்ஸ் சமீப காலங்களில் போன்றவர்கள் வெளிப்படையாகவே  பாராட்டியிருந்தனர்.

IPL 2022

இந்த தொடரில் எவ்வளவு ரன் மழை பொழிகிறதோ அதை விட இருமடங்கு பண மழை பொழிகிறது. இதில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களும் வெறும் 2 மாதங்கள் விளையாடுவதற்கு பல கோடி ரூபாய்களை சம்பளமாக பெறுகின்றனர். இப்படி கோடிகளில் புரண்டு இமயத்தின் உச்சத்தை எட்டியுள்ள இத்தொடரில் இம்முறை லக்னோ 7000+ கோடி, குஜராத் 5000+ கோடி என புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டு வழக்கமான 60 போட்டிகளுக்கு பதிலாக 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

அந்த 2 அணிகளின் வாயிலாக 12,000+ கோடி இந்த வருடத்தில் வருமானமாக பெற்ற பிசிசிஐ “டாடா டைட்டில் ஸ்பான்சர்ஷிப்” வியிலாக வரலாற்றிலேயே முதல் முறையாக ஸ்பான்சர்ஷிப் பணமாக 1000 கோடிகளை பெற்றுள்ளது. அத்துடன் வரலாற்றில் முதல் முறையாக ஆரஞ்சு, ஊதா தொப்பிகளுக்கு ஸ்பான்சர்ஷிப் என இந்த வருடம் மட்டும் மொத்தமாக பிசிசிஐ 15,000+ கோடிகளை கல்லா கட்டியுள்ளது.

பறந்த மானம்:
இதனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்களை விட பிசிசிஐ பணக்கார கிரிக்கெட் வாரியமாக கிரிக்கெட்டை ஆட்சி செய்கிறது. சொல்லப்போனால் ஐசிசியை விட அதிக வருமானத்தை பிசிசிஐ ஈட்டுவதாலும் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளை விட ஐபிஎல் சிறந்த தொடராக விளங்குவதாலும் உலகிலேயே நாங்கள் தான் கெத்து என்று இந்திய ரசிகர்கள் மார்தட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க : அது மட்டுமே காரணமல்ல! தோல்வி அடைந்ததுக்கான காரணத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட தல தோனி

ஆனால் அவை அனைத்தும் நேற்று பவர்கட் என்ற நிகழ்வால் மொத்தமாக உலக அளவில் காற்றில் பறந்தது என்று கூறினால் மிகையாகாது. இதனால் ஐபிஎல் போன்ற உலகத்தரம் வாய்ந்த தொடரில் போட்டியில் வெற்றியை மாற்றக்கூடிய முக்கிய டிஆர்எஸ்க்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காத பிசிசிஐ அந்த 15,000 கோடிகளை என்ன செய்கிறது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதன் காரணமாகவே பல முன்னாள் வீரர்களும் ஜாம்பவான்களும் பிசிசிஐ மீது தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement