அது மட்டுமே காரணமல்ல! தோல்வி அடைந்ததுக்கான காரணத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட தல தோனி

dhoni
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பம் முதலே எதுவுமே சரியாக அமையவில்லை. ஏற்கனவே தொடர் தோல்விகளால் 99% பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை சென்னை இழந்த நிலையில் நேற்று மும்பைக்கு எதிராக தனது 12-ஆவது லீக் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற அந்த அணி அதிகாரப்பூர்வமாக 2-வது அணியாக சுற்றுடன் வெளியேறியுள்ளது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு முதல் ஒவேரிலேயே டேவோன் கான்வே எல்பிடபிள்யூ முறையில் கோல்டன் டக் அவுட்டானார்.

MI vs CSK

- Advertisement -

வெளியேறிய சென்னை:
ஆனால் அவர் அதை ரிவியூ செய்ய முயன்றபோது பவர்கட் என்பதால் ரிவியூ செய்ய முடியாது என்று அம்பயர் தெரிவித்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அதேபோன்ற நிலைமை 2.4 ஓவர்கள் வரை தொடர்ந்ததால் அதற்கிடையே ராபின் உத்தப்பாவும் 1 ரன்னில் எல்பிடபிள்யூ முறையில் சந்தேகத்துடன் அவுட்டாகி சென்றார்.

அதைவிட மொய்ன் அலி, அம்பத்தி ராயுடு, சிவம் துபே உட்பட இதர பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் மும்பையின் அதிரடியான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் பெவிலியன் திரும்பினார்கள். அதனால் 50 ரன்களை கூட தாண்டாது என கருதப்பட்ட அந்த அணியை நல்லவேளையாக கேப்டன் தோனி 36* (33) ரன்கள் அடித்து காப்பாற்றிய போதிலும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 16 ஓவரில் 97 ரன்களுக்கு சுருண்டது. மும்பை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக டானியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

MI vs CSK 2

அதை தொடர்ந்து 98 என்ற சுலபமான இலக்கை துரத்திய மும்பையை எளிதாக வெற்றி பெற விடாமல் சென்னை கடும் சவாலை கொடுத்த போதிலும் 14.5 ஓவரில் 103/5 ரன்களை எடுத்த மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை எடுத்து முகேஷ் சவுத்ரி போராடினார். இதனால் பங்கேற்ற 12 போட்டிகளில் 8-வது தோல்வியை பதிவு செய்த சென்னை 2020க்கு பின் மீண்டும் வரலாற்றில் 2-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் அதிகாரப்பூர்வமாக பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

பவர்கட் காரணமல்ல:
இந்த தோல்விக்கு வான்கடே மைதானத்தில் சதி வேலையாக செய்யப்பட்ட பவர்கட் தான் காரணம் என்று பல சென்னை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் முதல் ஒருசில ஓவர்கள் மட்டுமே பவர்கட் ஏற்பட்ட நிலைமையில் முதல் 2 விக்கெட்களை தவிர எஞ்சிய 8 விக்கெட்டுகளை மும்பையின் அசுரத்தனமான வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சென்னை பேட்ஸ்மேங்கள் சீட்டுக்கட்டு சரிவது போல தங்களது விக்கெட்டுகளை இழந்ததும் தோல்விக்கான முக்கிய காரணமாகும். என்னதான் பிட்ச் பேட்டிக்கு சவாலாக இருந்திருந்தாலும் கூட அதற்கு தாக்கு பிடித்து இன்னும் கூடுதலாக 20 – 30 ரன்களை எடுத்திருந்தால் சென்னை வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பிருந்திருக்கும்.

dhoni 1

ஏனெனில் 98 ரன்களை துரத்திய மும்பையை முகேஷ் சவுத்ரி உட்பட சென்னை பவுலர்களும் மிரட்டலாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை எடுத்து கடும் சவால் கொடுத்தனர். ஒருவேளை 120 – 130+ ரன்கள் எடுத்திருந்தால் சென்னை போராடி வெற்றி பெற்றிருக்கும். அதன் காரணமாக தோல்விக்கு பவர்கட் மட்டுமே காரணமல்ல மோசமான பேட்டிங் ஒரு முக்கிய காரணம் என்று போட்டி முடிந்த பின் கேப்டன் எம்எஸ் தோனி வெளிப்படையாகவே தோல்வியை ஒப்புக்கொண்டார்.

- Advertisement -

ஒப்புக்கொண்ட தோனி:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பிட்ச் எப்படி இருந்தாலும் பேட்டிங்கில் 130 ரன்களுக்கு குறைவாக இருந்தால் எந்த பவுலர்களாலும் கட்டுப்படுத்தி வெற்றி பெற முடியாது. இருப்பினும் தோல்வியடைந்தாலும் கூட பந்துவீச்சில் சவாலை கொடுக்க வேண்டும் என்று என்னுடைய பவுலர்களிடம் கேட்டுக் கொண்டேன். அந்த வகையில் 2 இளம் வேகப்பந்து வீச்சாளர்களும் (முகேஷ் சவுத்ரி, சிமர்ஜித் சிங்) அபாரமாக பந்து வீசினார்கள். இது போன்ற கடினமான சூழ்நிலைகளிலும் சிறப்பாக செயல்பட்டது அவர்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன். சமீப காலங்களில் எங்களது பெஞ்சில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் தவித்தோம். தற்போது இந்த 2 வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்படுவது மிகப்பெரிய பலமாகும்”

“அடுத்த சீசனில் மேலும் சில வேகப்பந்து வீச்சாளர்கள் (தீபக் சஹர்) வரும்போது மேலும் எங்களின் பந்துவீச்சு பலமடையும். அதேசமயம் எதிரணியும் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள். எங்களின் பேட்டிங் துறையில் முன்னேற்றங்கள் தேவைப்படுகிறது. ஒருசில பேட்ஸ்மேன்கள் நல்ல பந்துகளில் ஆட்டமிழந்தனர். எனவே ஒவ்வொரு போட்டியிலும் அவர்களும் கற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : டி.ஆர்.எஸ் செக் பண்ண பவர் கிடைக்கலையா ! வான்கடேவில் நிகழ்ந்த ட்ராமா – சேவாக் நியாயமான கேள்வி

இந்த வருடம் சுமாரான பந்துவீச்சு சென்னையின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த நிலையில் முகேஷ் சவுத்ரி, சிமர்ஜித் சிங் போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டுள்ளதால் புதிய பவுலர்கள் கிடைத்துள்ளதாக கூறும் எம்எஸ் தோனி அடுத்த வருடம் தீபக் சஹர் போன்ற வீரர்கள் இணையும் போது சென்னையின் பவுலிங் அடுத்த வருடம் வலுவானதாக மாறும் என்று தோல்வியிலும் மகிழ்ச்சியாக பேசினார்.

Advertisement