உங்களுக்கு அஸ்வின், ஷமி வேணும்னா அது கிடைக்காது பரவால்லையா? எம்எஸ்கே பிரசாத் பேட்டி

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லும் கணவுடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து அசத்தியது. இருப்பினும் அந்த போட்டிகளில் நட்சத்திர சீனியர் வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்காதது ஒரு தரப்பு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதிலும் குறிப்பாக கடைசி நேரத்தில் அக்சர் பட்டேல் காயத்தை சந்தித்து வெளியேறியதால் தேர்வான ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டும் அதற்கடுத்த போட்டிகளில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய ஆஃப் ஸ்பின்னராக சாதனை படைத்தும் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

- Advertisement -

அஸ்வின், ஷமி முக்கியமல்ல:
இருப்பினும் தரமான அஸ்வின் கடந்த போட்டியில் இருந்திருந்தால் பாகிஸ்தான் 190 ரன்களை கூட எடுத்திருக்காது என்று முன்னாள் கேப்டன் ரசித் லதீப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போன்ற அணியை தேர்வு செய்யாமல் நட்சத்திர அந்தஸ்துக்கு மதிப்பு கொடுத்து அஸ்வின், ஷமியை தேர்வு செய்தால் உலக கோப்பையை வெல்ல முடியாது என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார்.

சொல்லப்போனால் அஸ்வின், ஷமியிடம் கேட்டாலும் தங்களை விட அணியின் நலனே முக்கியம் என்று சொல்வார்கள் என தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அணி நிர்வாகம் செய்வது முற்றிலும் சரியானது. அதாவது மைதானம் சுழலுக்கு சாதகமாக இருந்தால் அஸ்வின் சரியான தேர்வாக இருப்பார். இல்லையென்றால் சர்துல் தாக்கூர் பேட்டிங், பவுலிங் துறைகளில் பயனை ஏற்படுத்துவார் என்பதால் தேர்வு செய்யப்படுவார்”

- Advertisement -

“அதே போல சிராஜ் அல்லது பும்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று அணி நிர்வாகம் நினைத்தால் மட்டுமே ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கும். ஏனெனில் தற்போதைக்கு இந்திய அணி மிகவும் சமநிலையுடன் இருக்கிறது. சொல்லப்போனால் அஸ்வின், ஷமியிடம் நீங்கள் சென்று இதை பற்றி கேட்டால் அணி நிர்வாகம் எடுத்துள்ள முடிவு சரி தான் என்று அவர்கள் ஒப்புக்கொள்வார்கள்”

இதையும் படிங்க: வங்கதேச அணிக்கெதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – டாசுக்கு பிறகு அறிவித்த ரோஹித் சர்மா

“மேலும் இத்தொடரில் நாம் கோப்பையை வெல்ல வேண்டுமா? அல்லது நட்சத்திர அந்தஸ்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமா? ஒருவேளை நட்சத்திர அந்தஸ்துக்கு மதிப்பு கொடுத்தால் சிராஜுக்கு பதிலாக ஷமி தான் விளையாட வேண்டும். எனவே இந்த முடிவை அனைத்து வீரர்களும் ஒப்பு கொண்டிருப்பார்கள். ரசிகர்களுக்கு அஸ்வின், ஷமி போன்றவர்கள் வெளியே இருப்பதை பார்ப்பது நன்றாக இருக்காது. இருப்பினும் போட்டி நாளன்று சரியான 11 பேர் அணியை களமிறக்கும் முடிவையே அணி நிர்வாகம் எடுப்பார்கள்” என்று கூறினார்.

Advertisement