ஆட்டோ ஓட்டப்போ என கலாய்த்த ரசிகர்கள், மீண்டுவர உதவிய தோனியின் அறிவுரை – உருகும் இந்திய ஸ்டார் வீரர்

Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சமீப காலங்களாக தமது அபாரமான திறமையால் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மையான பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளார். ஆரம்ப காலங்களில் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடி வந்த இவர் ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக இருந்தார்.

Siraj

- Advertisement -

குறிப்பாக அளவில் சிறியதாக இருக்கும் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பல ஐபிஎல் போட்டிகளில் இவரை பல பேட்டர்கள் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறக்கவிட்டு தேவையான ரன்களை அடித்துக் கொள்வார்கள். அதுவும் இறுதிக்கட்ட ஓவர்களில் இவர் மோசமான பந்து வீசியதால் பல போட்டிகளில் பெங்களூரு அணியின் கையில் இருந்த வெற்றிகள் எதிரணியிடம் சென்றுள்ளது.

தந்தையும் தாய்நாடும்:
இதனால் இவரை பல ரசிகர்கள் “அடுத்த அசோக் டிண்டா, டிண்டா ஆர்மி பவுலர்” என படு மோசமாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தார்கள். இருப்பினும் அதற்கெல்லாம் மனம் தளராமல் தொடர்ந்து பெங்களூரு அணியில் விளையாடி வந்த இவரை அப்போதைய கேப்டன் விராட் கோலி முழுமையாக நம்பி அதிகப்படியான வாய்ப்பையும் ஆதரவையும் தொடர்ந்து கொடுத்து வந்தார்.

siraj

அதை சரியாக பயன்படுத்த துவங்கிய முகமது சிராஜ் கடந்த 2020 ஐபிஎல் முதல் துல்லியமாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்கும் நல்ல பந்து வீச்சாளராக மாறத் துவங்கினர். அதன் காரணமாக கடந்த 2020 டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடரில் விளையாட காத்துக்கொண்டிருந்த முகமது சிராஜ்க்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

- Advertisement -

நட்சத்திரமாக சிராஜ்:
ஏனெனில் அவர் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது அவரின் தந்தை திடீரென இறந்து விட்டதால் அவரால் இந்தியாவுக்கு திரும்ப முடியவில்லை. தனது தந்தையின் இறப்பிற்கு செல்வதை விட தாய் நாட்டுக்காக விளையாடுவதே முக்கியம் என அவர் இந்திய அணியுடனேயே இருந்தார். அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த தொடரில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்க அதை கச்சிதமாக பயன்படுத்திய முகமது சிராஜ் அதன் பின் இந்தியாவின் முக்கிய பந்துவீச்சாளராக உருவெடுத்தார்.

siraj

குறிப்பாக கடந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் அதிரடியாக பந்துவீசிய அவர் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். தற்போது 3 வகையான இந்திய அணியில் விளையாட தகுதியானவராக தரம் உயர்ந்துள்ளார். அத்துடன் தாய்நாட்டுக்காக தனது மகன் விளையாட வேண்டும் என்ற அவரின் தந்தையின் கனவையும் லட்சியத்தையும் நனவாக்கிய தணையனாக முகமது சிராஜ் திகழ்கிறார்.

- Advertisement -

எம்எஸ் தோனியின் ஆலோசனை:
இந்நிலையில் ஆரம்ப காலங்களில் மோசமாக விளையாடிய போது “அப்பாவுடன் ஆட்டோ ஓட்ட போ” என பல ரசிகர்கள் கிண்டலடித்ததாக முகமது சிராஜ் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு. “கடந்த 2018ஆம் ஆண்டு கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த ஒரு போட்டியில் 2 பீமர்களை வீசியதற்காக நான் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானேன். கிரிக்கெட்டை விட்டுவிட்டு உனக்கு அப்பாவுடன் ஆட்டோ ஓட்ட செல் என சிலர் கேலி செய்தது நினைவுக்கு உள்ளது. அதுமட்டுமில்லாமல் பலரும் பல வாக்கில் விமர்சனம் செய்தார்கள்.

MS Dhoni Mohammed SIraj

அந்த சமயத்தில் இந்தியாவுக்காக விளையாட நான் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட போது எம்எஸ் தோனி என்னிடம் “யார் சொல்வதையும் கேட்காதே. இன்று நீ சிறப்பாக செயல்பட்டால் அனைவரும் உன்னை பாராட்டுவார்கள். நாளை நீ மோசமாக செயல்பட்டால் அதே ரசிகர்கள் உன்னை விமர்சிப்பார்கள்.எனவே எதைப் பற்றியும் கவலைப்படாதே” என கூறினார்.

- Advertisement -

கடந்த 2017ஆம் இந்தியாவிற்காக விளையாட முதல் முறையாக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதல் முறையாக இந்திய அணிக்குள் நுழைந்தபோது அனுபவ வீரர் எம்எஸ் தோனி கூறிய வார்த்தைகளும் ஆலோசனைகளும் பின்னாளில் நல்ல கிரிக்கெட்டராக வளர உதவியதாக சிராஜ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறியது பின்வருமாறு.

இதையும் படிங்க : இந்திய வீரரின் கை, கால்களை கட்டிப்போட்டு ரகளையில் ஈடுபட்ட ஆண்ட்ரூ சைமன்ஸ் – 2013இல் நிகழ்ந்த ருசிகரம்

“அன்று மோசமாக பந்து வீசிய போது என்னை கேலி செய்தவர்கள் என்று சிறந்த பவுலர் என பாராட்டுகிறார்கள். ஆனால் அப்போது இருந்த சிராஜ் தான் இப்போதும் இருக்கிறேன்” என கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் கடந்த சீசன்களில் அபாரமாக செயல்பட்டதால் 2022 தொடருக்காக சிராஜை பெங்களூரு நிர்வாகம் தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement