இந்திய வீரரின் கை, கால்களை கட்டிப்போட்டு ரகளையில் ஈடுபட்ட ஆண்ட்ரூ சைமன்ஸ் – 2013இல் நிகழ்ந்த ருசிகரம்

Symonds
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் களத்திலும் களத்திற்கு வெளியேவும் எப்போதுமே மிகுந்த ஜாலியாக இருப்பதுடன் அவ்வப்போது சக கிரிக்கெட் வீரர்களுடன் ஏதாவது கேளிக்கை கலாட்டாவில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டவர். குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இந்தியா பரபரப்புடன் விளையாடிக் கொண்டிருக்க அவர் மட்டும் பவுண்டரி எல்லையில் அசால்ட்டாக ஒய்யாரமாய் படுத்துக் கொண்டிருந்த புகைப்படங்கள் உலக அளவில் ட்ரெண்ட் ஆகின.

chahal

- Advertisement -

இதன் காரணமாகவே இவருக்கு இந்தியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். அத்துடன் இந்தியா பங்குபெறும் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றியவர்களுடன் அந்த போட்டியின் இறுதியில் அவர் எடுக்கும் பேட்டியை “சஹால் டிவி” என்ற பெயரில் பிசிசிஐ தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடுவதும் வழக்கமான ஒன்றாகும். இப்படிப்பட்ட கலகலப்பான கிரிக்கெட் வீரராக இருக்கும் சஹால் தற்போது வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா பங்கு பெரும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார்.

மும்பையில் சஹால்:
கடந்த 2014 முதல் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய வீரராக விளையாடி வந்த அவரை ஐபிஎல் 2022 சீசனுக்காக அந்த அணி நிர்வாகம் தக்க வைக்கவில்லை. எனவே விரைவில் நடைபெற உள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்று புதிய அணிக்காக விளையாட சஹால் தயாராகியுள்ளார்.

Chahal

பெங்களூரு அணிக்கு விளையாடுவதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில் யூஸ்வென்ற சஹால் விளையாடி வந்தார். அந்த அணிக்காக விளையாடிய போது கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரை மும்பை இந்தியன்ஸ் அணி வென்று சாதனை படைத்தது. அப்போது நிகழ்ந்த வெற்றி கொண்டாட்டத்தில் அதே அணியில் விளையாடிய ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ சைமன்ஸ் தம்மை கை கால்களை கட்டி போட்டு ரகளையில் ஈடுபட்டதை தற்போது அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

- Advertisement -

கை, கால்களை கட்டிப்போட்டு:
இதுபற்றி அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் வென்றபோது அந்த சம்பவம் நடந்தது. அந்த வெற்றிக்குப் பின்னர் நிகழ்ந்த பார்ட்டியில் ஆன்ட்ரூ சைமன்ஸ் நிறைய ப்ரூட் ஜூஸ் குடித்திருந்தார். அப்போது விளையாட்டாய் எனது கைகளை அவர் கட்ட மற்றொரு வீரர் ஜேம்ஸ் பிராங்க்ளின் எனது கால்களை கட்டி விட்டார்” என தெரிவித்துள்ள சஹால் தனது கை கால்களை கட்டிபோட்டுவிட்டு அதிலிருந்து விடுபடுமாறு ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மற்றும் ஜேம்ஸ் பிராங்க்ளின் ஆகியோர் தமக்கு சவால் விடுத்ததாக கலகலப்பாக கூறியுள்ளார்.

Yuzvendra chahal andrew symonds

இது பற்றி அவர் மேலும் கூறியது பின்வருமாறு. “எனது கை கால்களை கட்டி போட்ட அவர்கள் அதிலிருந்து விடுபடுமாறு எனக்கு சவாலை அளித்து அறையை விட்டு வெளியேறி விட்டார்கள். ஆனால் அவர் எனது வாயை டேப்பால் ஓட்டி விட்டதை மறந்து விட்டு சென்று விட்டார்கள். இறுதியில் அடுத்த நாள் காலை அறையை சுத்தம் செய்பவர் வந்து என்னை அதில் இருந்து விடுவித்தார்” என வருத்தம் நிறைந்த கலகலப்புடன் கூறியுள்ளார்.

கலகலப்பான சஹால்:
பொதுவாகவே முரட்டுத்தனமாக காட்சி அளிக்கக் கூடிய ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஜேம்ஸ் பிராங்கிளின் உதவியுடன் தனது கை கால்களை கட்டி போட்டதுடன் வாயையும் பேசமுடியாமல் செய்துவிட்டு அறையை பூட்டி விட்டு சென்று விட்டார்கள் என தெரிவித்துள்ள சஹால் அதன் காரணமாக ஹோட்டல் அறையில் நீண்ட நேரம் தவித்ததாக தெரிவித்துள்ளார். அவர்களும் தன்னை கட்டிப் போட்டதை மறந்துவிட்டதால் கடைசிவரை அதிலிருந்து தம்மால் விடுபட முடியவில்லை என இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளார். இறுதியில் ஹோட்டல் கிளீனர் வந்து தம்மை காப்பாற்றியதாக ருசிகரமான சம்பவத்தை தற்போது சஹால் தெரிவித்துள்ளார்.

chahal 2

அப்போது முதல் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் தமக்கு மிகச் சிறந்த நண்பர் என தெரிவித்துள்ள சஹால் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் போதெல்லாம் அவரின் வீட்டுக்கு சென்று வருவேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சைமன்ஸ் போலவே கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற பல நட்சத்திர வெளிநாட்டு வீரர்களின் நெருங்கிய நண்பராக சஹால் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement