
சி.எஸ்.கே அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தற்போது 44 வயதை எட்டியிருக்கும் வேளையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது அவருக்கு கடைசி சீசனாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு தோனியின் ஆட்டத்தை நேரில் காண்பதற்காக ரசிகர்கள் கூட்டமும் மைதானத்திற்கு படையெடுத்து வருகிறது. ஆனால் இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளில் தோனி இன்னும் பங்கேற்று விளையாடவில்லை.
இந்த 2026 ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக ஏற்பட்ட காயம் காரணமாக ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாடமாட்டார் என்று கூறப்பட்டது. அந்த வகையில் இதுவரை நான்கு போட்டியில் விளையாட தோனி எப்போது களத்திற்கு திரும்புவார்? என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்.
ஏனெனில் நிச்சயம் அடுத்த ஆண்டு அவரால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாது என்பதனால் இந்த ஆண்டு அவரது கடைசி சீசன் என்பதினாலும் அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் மத்தியில் ஆவல் இருக்கிறது. முதல் நான்கு போட்டிகளை தவறவிட்ட தோனி நிச்சயம் ஏப்ரல் 14-ஆம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டியிலாவது பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது இந்த எதிர்பார்ப்புக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மருத்துவக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் : தோனி தற்போது உடற்தகுதியை மீட்கும் பயிற்சிகளிலும், வலைப்பயிற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஆனால் அவர் நாளைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில் முன்கூட்டியே அவரை விளையாட வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்பதால் அவர் நாளைய போட்டியை தவறவிடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் சதம் அடித்ததுக்கு பின்னால் இருக்கும் பிராக்டீஸ் இதுதான் – பத்ரிநாத் பகிர்ந்த சுவாரசிய தகவல்
அதேவேளையில் மற்றொரு தகவலாக ஏப்ரல் 19-ஆம் தேதி சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டியில் அவர் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று அவர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் நிச்சயம் விக்கெட் கீப்பராக இல்லாமல் இன்பாக்ட் பிளேயராகவே விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.