சஞ்சு சாம்சன் சதம் அடித்ததுக்கு பின்னால் இருக்கும் பிராக்டீஸ் இதுதான் – பத்ரிநாத் பகிர்ந்த சுவாரசிய தகவல்

Badrinath and Samson
- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சன் அந்த அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு அந்த அணியில் இருந்து வெளியேற முடிவு செய்தார். அதன் காரணமாக பல்வேறு அணிகள் அவரை மினி ஏலத்திற்கு முன்னதாகவே ட்ரேடிங் முறையில் விலைக்கு வாங்க முயற்சிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விட்டுக் கொடுத்து சஞ்சு சாம்சனை தங்களது அணிக்குள் கொண்டு வந்தது.

சஞ்சு சாம்சனின் பயிற்சி குறித்து பேசிய : சுப்பிரமணியம் பத்ரிநாத்

மஹேந்திர சிங் தோனி தற்போது தனது கரியரின் இறுதி கட்டத்தில் இருக்கும் வேளையில் அவருக்கு மாற்று வீரராக சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி தேர்வு செய்தது. நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய சாம்சன் சிஎஸ்கே அணிக்காகவும் மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் சஞ்சு சாம்சன் பெரியளவில் ரன் குவிக்காமல் இருந்தது பெரிய அழுத்தத்தை நிச்சயம் அவருக்கு தந்திருக்கும்.

- Advertisement -

ஆனால் நான்காவது போட்டியின் போது டெல்லி அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அவர் சதம் அடித்து தனது தேர்வை நியாயப்படுத்தி உள்ளார். அதோடு துவக்க வீரராக அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் சென்னை அணியின் அடுத்த பெரிய நட்சத்திர வீரராக பார்க்கப்படும் வேளையில் அவரது இந்த சதம் நிர்வாகத்தின் மத்தியிலும் திருப்தியை அளித்திருக்கும்.

இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடிப்பதற்கு முன்னதாக சஞ்சு சாம்சன் எவ்வாறு பயிற்சியில் தயாரானார்? என்பது குறித்து முன்னாள் சி.எஸ்.கே வீரரான பத்ரிநாத் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பயிற்சியாளர் குழுவில் இடம் பெற்றிருக்கும் ஸ்ரீதரன் ஸ்ரீராமிடம் சஞ்சு சாம்சனின் பயிற்சி முறை குறித்து பேசினேன்.

- Advertisement -

அப்போது அவர் என்னிடம் சஞ்சு சாம்சன் போட்டிக்கு முந்தைய நாள் பயிற்சி செய்ய வரவில்லை என்றும் ஆனால் அதற்கு முந்தைய நாள் மூன்று மணி நேரம் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபட்டார் என்றும் தெரிவித்தார். அதோடு மைதானத்தில் நடு ஆடுகளத்தில் பயிற்சி செய்வதற்கு முன்னதாக உள் அரங்கிலும் கடுமையான பயிற்சியினை மேற்கொண்டு வந்ததாகவும் கூறினார்.

இதையும் படிங்க : பேப்பர்ல வெயிட்டா இருந்தாலும் மும்பை அணி போட்டியில் தோற்க காரணம் இதுதான் – அஷ்வின் வெளிப்படை

போட்டியின் முந்தைய நாள் அவர் பயிற்சியை தவித்ததற்கு காரணம் மனநிலையை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தான் என்றும் அதற்கு முந்தைய நாள் கடுமையான பயிற்சி செய்ததை அப்படியே போட்டி நாளன்று அவர் வெளிப்படுத்தியதால் தான் சதம் அடிக்க முடிந்ததாகவும் கூறினார். சேப்பாக்கம் ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டுமோ அப்படி விளையாடுவதற்கும், எந்தெந்த பகுதியில் ரன்களை சேர்க்க வேண்டும் என்பதையும் கணித்து சஞ்சு சாம்சன் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் ஸ்ரீதர் ஸ்ரீராம் கூறியதாக பத்ரிநாத் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement