IPL 2023 : தயவு செஞ்சு அதை மட்டும் செய்ங்க – ஃபைனலுக்கு முன்பாக சிஎஸ்கே வீரர்களுக்கு தோனி வைத்த முக்கிய கோரிக்கை என்ன

MS Dhoni Harshal Bhogle
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்றில் கடுமையாக போராடி புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது. அதனால் கடந்த வருடம் புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்து அவமானத்திற்கு உள்ளான அந்த அணி இம்முறை மிகச் சிறப்பாக செயல்பட்டு அதிலிருந்து கம்பேக் கொடுத்து வரலாற்றில் 14 சீசன்களில் 12வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து சொந்த ஊரான சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் நடப்புச் சாம்பியன் குஜராத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வீழ்த்தியது.

Ruturaj Gaikwad

- Advertisement -

அதனால் 3 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக குஜராத்தை தோற்கடித்த சென்னை மே 28இல் அகமதாபாத் நகரில் நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டிக்கு நேரடியாக முதல் அணியாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. அத்துடன் வெற்றிகரமான மும்பை, பெங்களூரு ஆகிய அணிகள் சேர்ந்து 9 ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் வரலாற்றிலேயே முதல் முறையாக 10வது முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற சாதனையையும் தோனி தலைமையிலான சென்னை படைத்துள்ளது.

தோனியின் கோரிக்கை:
இதை தொடர்ந்து ஃபைனலிலும் சிறப்பாக செயல்பட்டு 5வது கோப்பையை வென்று மும்பையின் சாதனையை சென்னை சமன் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஃபைனலில் பந்து வீசும் போது எதிரணி பேட்ஸ்மேன்கள் மற்றும் சூழ்நிலைக்கேற்றார் போல் ஃபீல்டிங்கை மாற்ற முயற்சிக்கும் தருணத்தில் அனைத்து வீரர்களும் தயவு செய்து தம்மை பார்க்குமாறு சென்னை வீரர்களுக்கு தோனி கோரிக்கை வைத்துள்ளார். அதாவது சூழ்நிலைக்கேற்ப அடிக்கடி ஃபீல்டர்கள் நிற்கும் இடத்திலிருந்து ஒருசில அடிகள் அல்லது இடத்தையே கேப்டன்கள் மாற்றுவது வழக்கமாகும்.

CSK vs GT

ஆனால் அது போன்ற சமயங்களில் சமீபத்திய போட்டிகளை போல சென்னை வீரர்கள் வேறு இடங்களை வேடிக்கை பார்க்காமல் தம்மை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளும் தோனி இது பற்றி ஹர்ஷா போக்லேவிடம் கொடுத்த பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நான் அந்த வழியில் செல்ல விரும்பவில்லை. ஆனால் நீங்கள் அந்த வழியில் செல்வீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் (சென்னை வீரர்கள்) அடிக்கடி ஃபீல்டிங்கை அட்ஜஸ்ட் செய்கிறீர்கள். அதனால் சில ஃபீல்டர்களை அடிக்கடி நானும் அங்கேயும் இங்கேயும் மாற்றுவதால் மிகவும் கடுப்பாகும் கேப்டனாக மாறுகிறேன்”

- Advertisement -

“எனவே ஃபீல்டர்கள் களத்தில் இருக்கும் போது எப்போதும் என் மீது கண்களை வைத்திருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு 2 – 3 பந்துக்கும் ஒரு முறை நான் உங்களை 2 – 3 அடிகள் இடது அல்லது வலது புறத்தில் நகருமாறு சொல்வதாக நினைத்துப் பார்த்தால் அது புரியும். மேலும் எப்போதும் நான் என்னுடைய தைரியமான உணர்வை நம்பி அதற்கேற்றார் போல் முடிவுகளை எடுக்கிறேன். எனவே அது நல்ல பலனையும் கொடுக்கிறது” என்று கூறினார். அத்துடன் 10வது முறையாக ஐபிஎல் தொடரின் ஃபைனலில் விளையாடுவது பற்றி தோனி மேலும் பேசியது பின்வருமாறு.

MS Dhoni

“முன்பெல்லாம் ஐபிஎல் தொடரில் உலகின் சிறந்த வீரர்களைக் கொண்ட 8 அணிகள் மட்டுமே போட்டி போட்டன. ஆனால் தற்போது 10 அணிகள் விளையாடுவதால் போட்டி என்பது முன்பை விட மிகவும் கடினமாகியுள்ளது. அதனால் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. அதை செய்த காரணத்தாலேயே நாங்கள் இங்கே நிற்கிறோம். இத்தொடரின் ஆரம்பத்திலிருந்தே நிறைய வீரர்கள் தங்களுடைய தனிப்பட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தினர்”

இதையும் படிங்க:IPL 2023 : ரூல்ஸை விட சிலர் பெரியாளா இருக்காங்க, கிரிக்கெட்டின் நேர்மையை மீறிட்டாரு – தோனியை விளாசும் பிரபல ஆஸி அம்பயர்

“அந்த வகையில் இந்த வெற்றியில் அனைவரும் பங்காற்றியுள்ளதாக நான் கருதுகிறேன். குறிப்பாக மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்களுக்கு கணிசமான ரன்களை எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர்களும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது” என்று கூறினார்.

Advertisement