IPL 2023 : ரூல்ஸை விட சிலர் பெரியாளா இருக்காங்க, கிரிக்கெட்டின் நேர்மையை மீறிட்டாரு – தோனியை விளாசும் பிரபல ஆஸி அம்பயர்

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்படும் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு மே 28இல் நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக நேரடியாக தகுதி பெற்றுள்ளது. கடந்த வருடம் புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்து பின்னடைவை சந்தித்த அந்த அணி இம்முறை லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் 2வது இடம் பிடித்து 14 சீசன்களில் 12வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது.

மேலும் குவாலிபயர் 1 பிளே ஆப் போட்டியில் நடைபெற்ற குஜராத்தை தோற்கடித்த சென்னை வரலாற்றில் 10வது முறையாக ஐபிஎல் ஃபைனலுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக சாதனையும் படைத்தது. இந்த வெற்றிகளுக்கு அனைத்து வீரர்களுமே முக்கிய பங்காற்றி வரும் நிலையில் கேப்டன் தோனியும் தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து அனைவரது பாராட்டுகளை பெற்று வருகிறார். இருப்பினும் குஜராத்துக்கு எதிரான குவாலிபயர் 1 போட்டியில் 5 நிமிடங்கள் அவர் ஏற்படுத்திய தாமதம் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

விளாசிய அம்பயர்:
அதாவது இந்த சீசனில் டெத் ஓவர்களில் அசத்தலாக செயல்பட்டு வரும் மதிசா பதிரானவை அப்போட்டியின் கடைசி நேரத்தில் வீசுவதற்காக 3 ஓவரை மிச்சப்படுத்தி வைத்திருந்த தோனி 16வது ஓவரை வீச அழைத்தார். ஆனால் 15வது ஓவரின் போது பெவிலியன் சென்றிருந்த பதிரனா 9 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் அடிப்படை விதிமுறைப்படி களத்திற்குள் வந்து அடுத்த 9 நிமிடங்கள் முடியும் வரை 16வது ஓவரை வீச அனுமதிக்க முடியாது என்று நடுவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் ரசித் கான் களத்தில் இருந்ததால் கிட்டத்தட்ட கையிலிருந்த வெற்றி வேறு பவுலரை பயன்படுத்தினால் பறி போய்விடும் என்று கருதிய தோனி போட்டியின் முடிவில் நிர்ணிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்காவிட்டால் அதற்கான அபராதத்தை ஏற்றுக் கொள்ள தயார் ஆனால் பதிரனா தான் 16வது ஓவரை வீச வேண்டும் என்ற கருத்தை நடுவர்களிடம் பேசிக் கொண்டே காலத்தை கடத்தினார். அதனால் சுமார் 5 நிமிடங்கள் வரை தாமதமான அந்த போட்டியில் பதிரனா பந்து வீசுவதற்கான நேரமும் வந்ததால் இறுதியில் தோனி எதிர்பார்த்தது போலவே நடுவர்கள் பந்து வீச அனுமதித்தனர்.

- Advertisement -

இருப்பினும் அந்த சமயத்தில் வேறொரு பவுலரை பயன்படுத்தாமல் நடுவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தோனியின் செயல் சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக இதுவே மும்பையாக இருந்திருந்தால் விலை கொடுத்து வாங்கி விட்டோம் என்று விமர்சித்திருப்பார்கள் என அந்த அணி ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதே போல தோனி விதிமுறையை மீறும் போது அதை நடுவர்கள் சிரித்துக் கொண்டு பார்த்தது ஏமாற்றமளிப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் தெரிவித்தார்.

இந்நிலையில் கிரிக்கெட்டின் அடிப்படை விதிமுறை மற்றும் நேர்மை தன்மையை விட தோனியை போன்ற மதிப்பு மிக்கவர் பெரியாளாக இருப்பதாக பிரபல முன்னாள் ஐசிசி ஆஸ்திரேலிய அம்பயர் டார்ல் ஹர்பார் விமர்சித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 450+ போட்டிகளில் நடுவராக செயல்பட்டு ஓய்வு பெற்ற அவர் இது பற்றி மிட் டே பத்திரிக்கையில் கூறியது பின்வருமாறு. “முக்கியமான 16வது ஓவரில் தாம் விரும்பிய பவுலர் வீசுவதற்காக எம்எஸ் தோனி வேண்டுமென்றே நேரத்தை வீணாக்கினார் என்பதே அந்த ஏமாற்றத்தை கொடுக்கும் தருணத்தை பார்த்து நான் தெரிந்து கொண்டதாகும்”

இதையும் படிங்க:IPL 2023 : மும்பையின் 6வது கோப்பை கனவை உடைத்த சுப்மன் கில் – சேவாக், விராட் கோலியை மிஞ்சி 3 மாஸ் வரலாற்று சாதனை

“என்னை பொறுத்த வரை அந்த சமயத்தில் பிரச்சனை என்னவெனில் கிரிக்கெட்டின் நேர்மை தன்மை மற்றும் நடுவர்களுக்கு வழங்கப்படும் மரியாதை ஆகியன முறையாக இல்லை. ஏனெனில் அந்த சமயத்தில் பந்து வீச கேப்டனுக்கு வேறு பவுலர்கள் தயாராக இருந்தும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். ஒருவேளை அந்த சமயத்தில் சிலர் (தோனி) அடிப்படை விதிமுறை மற்றும் கிரிக்கெட்டின் நேர்மை தன்மையை விட பெரியவராக இருந்திருக்கலாம். குறிப்பாக வெற்றிக்காக சிலர் எந்த எல்லையையும் தொடுவதற்கு செல்கிறார்கள் என்பதை பார்ப்பது ஏமாற்றமாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement