நன்றி மறக்காத தல தோனி.. 2004 ஹேர் ஸ்டைல்.. புதிய பேட் ஸ்பான்ஸர் ஸ்டிக்கரின் பின்னணி இதோ

MS Dhoni Friend
- Advertisement -

நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி ராஞ்சி போன்ற கிரிக்கெட் மிகவும் பிரபலமில்லாத சிறிய ஊரிலிருந்து படிப்படியாக முன்னேறி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் ஆரம்பகட்ட போட்டிகளில் தடுமாறினாலும் குறுகிய காலத்திலேயே அதிரடியாக விளையாடி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இந்திய விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றி புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினார் என்றே சொல்லலாம்.

அதை விட கேப்டன்ஷிப் பதவியில் அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழி நடத்திய அவர் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான ஐசிசி உலகக் கோப்பைகளை இந்தியாவுக்கு வென்று கொடுத்த ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார். மேலும் 2010இல் இந்தியாவை நம்பர் ஒன் டெஸ்ட் அணியாகவும் முன்னேற்றிய அவர் விராட் கோலி, அஸ்வின், ரோஹித் சர்மா போன்ற தற்போதைய ஜாம்பவான் வீரர்கள் வளர்வதற்கு அப்போதே வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர்.

- Advertisement -

நன்றி மறக்காத தல:
அப்படி மகத்தான வீரராக செயல்பட்ட அவர் 2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று தற்போது ஐபிஎல் தொடரில் சென்னைக்காக மட்டும் விளையாடி வருகிறார். அந்த வரிசையில் கடந்த வருடம் முழங்கால் வழியைத் தாண்டி சிறப்பாக செயல்பட்டு சென்னை ஐந்தாவது கோப்பையை வெல்ல உதவிய அவர் தற்போது 2024 சீசனில் விளையாடுவதற்கான பயிற்சிகளை துவங்கியுள்ளார்.

குறிப்பாக 2004ஆம் ஆண்டு அறிமுகமான போது வைத்திருந்த நீளமான முடிகளுடன் கூடிய ஹேர் ஸ்டைலுடன் அவர் பயிற்சி எடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை விட தற்போது அவர் “ப்ரைம் ஸ்போர்ட்ஸ்” எனும் புதிய ஸ்பான்சரின் பெயரை தன்னுடைய பேட்டில் ஸ்டிக்கராக ஒட்டியிருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அதனுடைய பின்னணி என்னவெனில் ஆரம்ப காலங்களில் கிரிக்கெட்டில் விளையாடும் போது தோனிக்கு நிறைய நண்பர்கள் உதவி செய்துள்ளார்கள். அதில் பாம்ஜித் சிங் எனும் நெருங்கிய நண்பர் தோனியின் பேட்டுக்கு முதல் முறையாக ஸ்பான்சர்ஷிப் வாங்கி கொடுத்தார். அது பற்றிய விவரத்தை 2016ஆம் ஆண்டு வெளியான எம்எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் ரசிகர்கள் இப்போதும் பார்க்கலாம்.

இதையும் படிங்க: ஏபிடி’யை முந்தி மாபெரும் வரலாறு படைத்த மில்லர்.. சிஎஸ்கே வழியில் ராயல்ஸை வெளியேற்றிய ஜேஎஸ்கே

மேலும் தற்போது தோனியின் அந்த நண்பர் ராஞ்சியில் பிரைம் ஸ்போர்ட்ஸ் எனும் விளையாட்டு உபகரணங்கள் கடையை நடத்தி வருகிறார். எனவே தன்னுடைய பேட்டுக்கு முதல் முறையாக ஸ்பான்சர்ஷிப்பை பெற்றுக் கொடுத்த பரம்ஜித் செய்த உதவியை மறக்காத தோனி தற்போது அவருடைய கடையை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் அந்த ஸ்டிக்கரை தன்னுடைய பேட்டில் ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement