ஏபிடி’யை முந்தி மாபெரும் வரலாறு படைத்த மில்லர்.. சிஎஸ்கே வழியில் ராயல்ஸை வெளியேற்றிய ஜேஎஸ்கே

JSK Faf Du Plessis
- Advertisement -

ஐபிஎல் போல தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிளையான ஜோஹன்ஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி ஃபப் டு பிளேஸிஸ் தலைமையில் போராடி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. குறிப்பாக 5 தோல்விகளை சந்தித்ததால் வாழ்வா – சாவா என்ற நிலைமைக்கு தள்ளப்பட்ட ஜேஎஸ்கே கடைசி போட்டியில் டர்பன் அணியை தோற்கடித்து கடைசி அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு வந்தது.

அந்த நிலையில் பிளே ஆஃப் சுற்றில் புள்ளி பட்டியலில் 3, 4வது இடம் பிடித்த பார்ல் ராயல்ஸ் – ஜோஹன்ஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய எலிமினேட்டர் போட்டி பிப்ரவரி 7ஆம் தேதி வாண்ட்ரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஜேஎஸ்கே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் தடுமாற்றமாக விளையாடி 18.5 ஓவரில் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

அசத்திய ஜேஎஸ்கே:
அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் டேவிட் மில்லர் 47, ஜேசன் ராய் 24 ரன்கள் எடுக்க ஜே எஸ் கே சார்பில் அதிகபட்சமாக ஷாம் குக் 4 விக்கெட்டுகள் எடுத்தார். மேலும் இந்த 47 ரன்களையும் சேர்த்து ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 10000 ரன்கள் அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற மாபெரும் சாதனையை நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் படைத்தார்.

இதுவரை 466 போட்டிகளில் 10019* ரன்கள் குவித்துள்ள அவருக்கு அடுத்தபடியாக பஃப் டு பிளேஸிஸ் 9684, ஏபி டீ வில்லியர்ஸ் 9424 ரன்களுடன் உள்ளனர். மேலும் உலக அளவில் டி20 கிரிக்கெட்டில் 10000 ரன்கள் அடித்த 12வது வீரர் என்ற பெருமையும் டேவிட் மில்லர் பெற்றார். அதை தொடர்ந்து 139 என்ற சுலபமான இலக்கை துரத்திய ஜேஎஸ்கே அணிக்கு கேப்டன் டு பிளேஸிஸ் – டு பிளாய் ஆகிய ஓப்பனிங் ஜோடி ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

10.3 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று ராயல்ஸ் பவுலர்களை வெளுத்து வாங்கிய இந்த ஜோடி 105 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது. அதில் டு பிளாய் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 68 (43) ரன்களில் அவுட்டானாலும் டு பிளேஸிஸ் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 55* (34) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

இதையும் படிங்க: இந்த தொடரில் நான் ரொம்பவே எதிர்பார்த்த ஒரு விஷயம் மிஸ்ஸிங்.. வருத்தம் தெரிவித்த – நாசர் ஹுசேன்

அதனால் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஜேஎஸ்கே குவாலிபயர் 2 போட்டியில் டர்பன் அணியை எதிர்கொள்ள தகுதி பெற்றது. குறிப்பாக 2010 ஐபிஎல் தொடரில் கடைசி நேரத்தில் வென்று நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்த சிஎஸ்கே அணியை போல இத்தொடரின் கடைசி லீக் போட்டியில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்குள் வந்துள்ள ஜேஎஸ்கே தற்போது எலிமினேட்டர் போட்டியில் வென்றுள்ளது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மறுபுறம் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் கிளையான பார்ல் ராயல்ஸ் இத்தொடரிலிருந்து வெளியேறியது.

Advertisement