CSK vs MI : டாஸ் போடும்போதே எனக்கு டவுட்டா தான் இருந்துச்சி. மும்பையை வீழ்த்திய பிறகு – தல தோனி அளித்த பேட்டி இதோ

MS-Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் போட்டியானது நேற்று மதியம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

CSK vs MI

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே குவித்தது. மும்பை அணி சார்பாக நேகல் வாதேரா 64 ரன்கள் அடித்தார். அவரை தவிர்த்து எந்த ஒரு வீரரும் 30 ரன்கள் கூட அடிக்கவில்லை.

சென்னை அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மதீஷா பதிரானா 4 ஓவர்களை வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதனை தொடர்ந்து 140 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.

Pathirana

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறுகையில் : இந்த போட்டி எங்களுக்கு ஒரு முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது. ஏனெனில் புள்ளி பட்டியலை பார்க்கும் போது அனைத்து அணிகளுமே புள்ளிகளின் அடிப்படையில் சிறிய இடைவெளியிலேயே இருந்து வருகிறது.

- Advertisement -

எனவே இந்த போட்டியில் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதோடு உண்மையிலேயே கூறவேண்டும் என்றால் நான் டாஸ் போடும்போது என்ன முடிவு எடுப்பதென்று டவுட்டில் தான் இருந்தேன். முதலில் பேட்டிங் செய்வதா? அல்லது பவுலிங் செய்வதா? என்று யோசிக்க முடியவில்லை. நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம்.

இதையும் படிங்க : பும்ராவுக்கு மாற்றாகவும் அடுத்த ஷமியாகவும் அவர் இந்தியாவுக்கு கிடைச்சுருக்காரு – நட்சத்திர வீரரை பாராட்டிய ஆர்பி சிங்

ஆனால் மழைவர வாய்ப்பு இருக்கிறது என்று ஏற்கனவே எங்களிடம் கூறப்பட்டிருந்ததால் மெஜாரிட்டியாக எடுக்கும் பந்துவீச்சு என்கிற முடிவை நானும் எடுத்தேன். அந்த வகையில் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement