பும்ராவுக்கு மாற்றாகவும் அடுத்த ஷமியாகவும் அவர் இந்தியாவுக்கு கிடைச்சுருக்காரு – நட்சத்திர வீரரை பாராட்டிய ஆர்பி சிங்

RP-Singh
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணிகளில் ஒன்றாக திகழும் இந்தியா 2013க்குப்பின் ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த வருடம் ஜூன் மாதம் இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல போராட காத்திருக்கும் இந்தியாவுக்கு முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் வெளியேறியுள்ளது ஆரம்பத்திலேயே பின்னடைவாக அமைந்துள்ளது.

Siraj

- Advertisement -

குறிப்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் முழுவதுமாக விலகியுள்ள அவர் உலக கோப்பையில் விளையாடுவாரா என்பதும் சந்தேகமாக உள்ளது. இருப்பினும் நிலைமையை சமாளிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள முகமத் ஷமி, முகமத் சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதற்கான பயிற்சியாக தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் முகமது சிராஜ் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்து வருகிறார்.

அடுத்த ஷமி:
ஆட்டோ ஓட்டுனரின் மகனான அவர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் விராட் கோலியின் உதவியுடன் வாய்ப்பு பெற்று கவனம் ஈர்க்கும் வகையில் செயல்பட்டு 2017இல் இந்தியாவுக்காக அறிமுகமானார். ஆரம்ப காலங்களில் ரன்களை வாரி வழங்கி கிண்டல்களை சந்தித்த அவர் விராட் கோலியின் தொடர்ச்சியான வாய்ப்புகளால் 2020 சீசனில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் இதே போல காயமடைந்த பும்ராவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்று தந்தையின் இறப்புக்கு கூட நாடு திரும்பாமல் 2 – 1 (3) என்ற கணக்கில் ரகானே தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா சரித்திரம் படைக்க முக்கிய பங்காற்றினார்.

Siraj-3

அப்போதிலிருந்தே டெஸ்ட் அணியில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதன்மை பவுலராக உருவெடுத்த அவர் கடந்த வருடம் ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு உலகின் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி சாதனை படைத்தார். அதே போல நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை 7.34 என்ற சிறந்த எக்கனாமியில் எடுத்து அசத்தி வரும் அவர் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்காக போராடக்கூடியவராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வரும் முகமது சிராஜ் தற்போதைய நிலைமையில் பும்ராவுக்கு மாற்றாக செயல்படும் அளவுக்கு திறமை கொண்டுள்ளதுடன் வரும் காலங்களில் அடுத்த முகமது ஷமியாக செயல்படுவார் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆர்பி சிங் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Aakash Chopra rp singh

“சிராஜை நான் நீண்ட நாட்களாக பின் தொடர்ந்து வருகிறேன். இந்திய அணியில் முதல் முறையாக சேர்ந்த போது அவருடைய செயல்பாடுகள் உச்சகட்டத்தில் இருந்த போதிலும் குறுகிய நாட்களிலேயே சரிவை சந்தித்தது. ஆனால் அதற்காக மனம் தளராமல் நிறையவற்றில் கடினமாக உழைத்துள்ள அவர் குறிப்பாக ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். மேலும் இப்போது டெக்னிக்கல் அளவில் அவர் தன்னுடைய மணிக்கட்டு பகுதிகளை பந்து வீசும் போது நேராக பின் தொடர்கிறார். அது போக பெரும்பாலும் ஸ்டம்ப் முதல் ஸ்டம்ப் வரையிலான லைனில் பந்து வீசுகிறார்”

இதையும் படிங்க:IPL 2023 : ஒருத்தருக்கு பதில் இன்னொரு டெஸ்ட் பிளேயரா? ராகுலுக்கு மாற்றாக லக்னோ வாங்கிய இந்திய வீரர் – கலாய்க்கும் ரசிகர்கள்

“எனவே தற்போதைய நிலையில் சந்தேகமின்றி அவர் பும்ராவுக்கு மாற்றாக திகழ்கிறார். சொல்லப்போனால் தற்போது அவருடைய செயல்பாடுகள் தொடர்ந்து உச்ச கட்டத்தை நோக்கி செல்கிறது. அதனால் அவர் அடுத்த முகமது ஷமியாக செயல்படலாம்” என்று கூறினார். அப்படி சமீப காலங்களில் முகமது சிராஜ் கண்டுள்ள நிறைய முன்னேற்றங்களில் பவர் பிளே ஓவர்களில் குறைந்தது 1 விக்கெட்டை எடுத்து ஆரம்பத்திலேயே சிறந்த தொடக்கத்தை கொடுப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Advertisement