CSK : பேட்டிங்கில் பின்வரிசையில் கடைசியாக இறங்குவது ஏன்? மில்லியன் டாலர் கேள்விக்கு – தோனி கொடுத்த பதில் இதோ

MS Dhoni Harshal Bhogle
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என்பதனால் சென்னை அணி விளையாடும் போட்டிகள் இந்தியா முழுவதும் எங்கு நடைபெற்றாலும் பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணியானது பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பினையும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

CSK 2023

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது பின் வரிசையில் களமிறங்கிய தோனி 9 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 20 ரன்கள் குவிக்க சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் 8 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் குவித்தது. பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 140 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் காரணமாக 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியிலும் பின்வரிசையில் களமிறங்கிய தோனி சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இந்த சீசனில் மட்டும் தோனி 204 என்கிற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 47 பந்துகளை சந்தித்து 96 ரன்களை விளாசியுள்ளார்.

MS Dhoni 16

அவர் அடித்த இந்த 96 ரன்களில் 72 ரன்கள் பவுண்டரிகள் மூலமாக கிடைத்துள்ளது. இதில் பத்து சிக்ஸர்களும், மூன்று பவுண்டரிகளும் அடங்கும். இப்படி அதிரடியான பார்மில் இருக்கும் தோனி முன்கூட்டியே களமிறங்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவின் போது முரளி கார்த்திக் அவர்கள் “ஏன் நீங்கள் முன்கூட்டியே பேட்டிங் இறங்க கூடாது?” என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த தோனி தெளிவான விளக்கத்தையும் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னுடைய வேலை இதுதான். நான் ஏற்கனவே எங்களது அணி வீரர்களிடம் கூறிவிட்டேன். நான் அதிகமாக ரன்னை ஓடி எடுக்கப்போவதில்லை. பின் வரிசையில் களம் இறங்கி அடிப்பது மட்டுமே என்னுடைய வேலை என தோனி கூறினார்.

இதையும் படிங்க : வீடியோ : தமக்கு மிகவும் பிடித்த கொல்கத்தாவுக்கு எதிராக ஐபிஎல் வரலாறு படைத்த சஹால் – லெஜெண்ட்டாக சாதனை

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : கடைசி சில ஓவர்களில் நான் ரன் ஓடாமல் பெரிய பெரிய பவுண்டரிகளை அடிக்க வேண்டும் என்பதற்காக பயிற்சி செய்து வருகிறேன். அந்த வகையில் இந்த போட்டியின் போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதி என்னுடைய பங்களிப்பை வெற்றிக்காக வழங்கியதிலும் மகிழ்ச்சி என தோனி தெளிவான விளக்கத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement