சோகத்தை கட்டுப்படுத்தவே முடில.. 2020இல் சொன்னாலும் அன்னைக்கே கடைசி நாளை குறிச்சுட்டேன்.. மனம் திறந்த தோனி

MS Dhoni
- Advertisement -

நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக மாபெரும் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய அவர் இந்திய விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றியமைத்தவர் என்றே சொல்லலாம்.

அதே போல ஆரம்பத்தில் டாப் ஆர்டரில் விளையாடிய அவர் நாளடைவில் அணியின் நலனுக்காக கேப்டனாக பொறுப்பேற்றதும் மிடில் ஆர்டரில் களமிறங்கி நிறைய போட்டிகளில் கடைசி வரை நின்று இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்த சிறந்த ஃபினிஷராக போற்றப்படுகிறார். அதே போல விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற தற்போதைய வீரர்கள் வளர்வதற்கு போதுமான ஆதரவை கொடுத்த அவர் இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்தையும் சிறப்பாகவே கட்டமைத்தார்.

- Advertisement -

மனம் திறந்த தோனி:
அப்படி சச்சினுக்கு நிகராக பல சாதனைகள் புரிந்த தோனி ரசிகர்கள் முன்னிலையில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2019 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை ஜடேஜாவுடன் இணைந்து போராடிய அவர் ரன் அவுட்டாகி வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாமல் கலங்கிய கண்களுடன் பெவிலியன் திரும்பினார்.

இறுதியில் அதுவே இந்தியாவுக்காக விளையாடிய கடைசி போட்டியாக மாறும் அளவுக்கு 2020 சுதந்திர தினத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓய்வு முடிவை அறிவித்த அவர் தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னைக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் பெரும்பாலும் கூலாக இருக்கும் தாம் 2019 செமி ஃபைனலில் தோல்வியை சந்தித்த போது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் தவித்ததாக தெரிவிக்கும் தோனி ஒரு வருடம் கழித்து ஓய்வை அறிவித்தாலும் அன்றைய நாளே மனதளவில் ஓய்வு பெற்று விட்டதாக சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“வெற்றியை நெருங்கிய போட்டியில் நீங்கள் தோல்வியை சந்தித்தால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடினமாகும். உள்ளுக்குள் நிறைய திட்டங்களை வைத்திருந்த நான் அதுவே இந்தியாவுக்காக கடைசியாக விளையாடிய நாளாக இருந்தது. மேலும் ஒரு வருடம் கழித்து நான் ஓய்வை அறிவித்தாலும் அன்றைய நாளிலேயே உண்மையாக ஓய்வு பெற்று விட்டேன். அது போன்ற சமயங்களில் நீங்கள் உணர்ச்சிகளின் உச்சத்தில் இருப்பீர்கள். 12 – 15 வருடங்கள் வரை நாட்டுக்காக விளையாடிய நீங்கள் அதன் பின்பும் அந்த வாய்ப்பை பெற மாட்டீர்கள்”

இதையும் படிங்க: வாழ்வா? சாவா? போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு விழுந்து மிகப்பெரிய அடி – முக்கிய வீரர் விலகல்

“பொதுவாகவே விளையாடுவதற்கு பலர் இருந்தாலும் சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் ஒலிம்பிக், காமன்வெல்த் உட்பட எந்த வகையான விளையாட்டில் விளையாடும் எந்த வகையான விளையாட்டு வீரர்களாக இருந்தாலும் நாட்டுக்காக விளையாடுவது பெரிய விஷயமாகும். ஒருமுறை அதிலிருந்து நான் ஓய்வு பெற்று விட்டால் மீண்டும் வருவதற்கு இடமில்லை. என்னால் மேற்கொண்டு எந்த பெருமையும் கொண்டு வர முடியாது. இது போன்ற விஷயங்கள் தான் என்னுடைய மனதில் இருந்தது” என்று கூறினார்.

Advertisement