வாழ்வா? சாவா? போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு விழுந்து மிகப்பெரிய அடி – முக்கிய வீரர் விலகல்

Hasan-Ali
- Advertisement -

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது கடந்த 2016-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தற்போது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. மொத்தம் பத்து அணிகள் கலந்து பங்கேற்றுள்ள இந்த உலகக் கோப்பை தொடரில் 45 லீக் ஆட்டங்களும், மூன்று நாக் அவுட் ஆட்டங்களும் நடைபெறுகின்றன.

இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும் என்பதால் இந்த லீக் சுற்று போட்டிகளின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கப் போகும் அணிகள் எது? என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் ஏற்கனவே 5 லீக் ஆட்டங்களில் விளையாடிவுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு வெற்றி மற்றும் மூன்று தோல்வி என 4 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கும் வேளையில் இன்று அக்டோபர் 27-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்பதனால் பாகிஸ்தான் அணி ஒரு மிகப்பெரிய அழுத்தத்திற்கு மத்தியிலேயே இன்றைய ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் சில வீரர்கள் காயம் காரணமாக இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாட முடியாத வேளையில் தற்போது அந்த அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அவர் இன்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : இந்தியா சந்தோசமா இருக்கக்கூடாது.. யாருன்னு காட்டி அதை கலைச்சு விடுங்க.. இங்கிலாந்துக்கு நாசர் ஹுசைன் கோரிக்கை

ஏற்கனவே காயம் காரணமாக நசீம் ஷா உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறிய பிறகு அணிக்குள் வந்த ஹசன் அலி சிறப்பாக பந்துவீசி வந்த வேளையில் அவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக முகமது வசிம் ஜூனியர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடரில் ஹசன் அலி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த வேளையில் அவரும் வெளியேறியுள்ளது அந்த அணிக்கு ஒரு பெரிய பின்னடைவு என்றே கூறலாம்.

Advertisement