- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நீங்க நல்ல கிரிக்கெட்டை ஆடுனா.. காசு கொடுத்து அதை செய்யத் தேவையில்லை.. தல தோனி பளிச்

இந்திய கிரிக்கெட் அணிக்காக எம்எஸ் தோனி 2004 – 2019 வரை மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சாதனை படைத்து ஓய்வு பெற்றார். அதை விட இந்திய அணியை அற்புதமாக வழி நடத்திய அவர் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாகவும் உலக சாதனை படைத்துள்ளார்.

அத்துடன் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்றுள்ள தோனி வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். மேலும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகள், ஆசிய கோப்பை உட்பட தோனி வெல்லாத கோப்பைகளே இல்லை என்று சொல்லலாம். தற்போது 42 வயதிலும் அவர் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

பணம் தேவையில்லை:

அந்தளவுக்கு தரமும் திறமையும் கொண்ட தோனியை சமூக வலைதளங்களில் அதிகமாக காண முடியாது என்றே சொல்லலாம். இப்போதுள்ள வீரர்கள் சாதாரண நிகழ்வுகளுக்கு கூட தினம்தோறும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் விலகயிருக்கும் தோனி தனது நேரத்தை உண்மையான உலகில் செலவிடுபவராக அறியப்படுகிறார்.

கடைசியாக அவர் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற போது ஜூலை மாதம் வாழ்த்து பதிவிட்டார். அதன் பின் 6 மாதங்கள் கடந்தும் தோனி ஒரு பதிவை கூட பதிவிடவில்லை. இந்நிலையில் களத்தில் நாம் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால் பணம் கொடுத்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ய தேவையில்லை என்று தோனி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

தல தோனி ஸ்டைல்:

“நான் எப்போதும் சமூக வலைதளங்களின் பெரிய ரசிகனாக இருந்தது கிடையாது. எனது கேரியர் முழுவதும் நிறைய மேனேஜர்கள் என்னை அதில் நேரத்தை செலவிடுமாறு தள்ளினார்கள். 2004ஆம் ஆண்டு நான் விளையாடத் துவங்கினேன். பின்பு தான் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பிரபலமாகின. அப்போது அனைத்து மேனேஜர்களும் நீங்கள் பிஆர் (மக்கள் தொடர்பு) செய்து நட்சத்திர அந்தஸ்தை உருவாக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள்”

இதையும் படிங்க: ரோஹித், கோலி தாராளமா ரிட்டையராகலாம்.. இந்தியாவுக்கு அந்த மாதிரி பசங்க ரெடியா இருக்காங்க.. டேரன் லேமன்

“ஆனால் நீங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால் பிஆர் செய்ய வேண்டியதில்லை என்பது மட்டுமே அவர்கள் அனைவருக்குமான என்னுடைய ஒரே பதிலாக இருந்தது” என்று கூறினார். இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்காக அடுத்த வருடம் தோனி விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த வாய்ப்பில் அவர் கோப்பையுடன் விடைபெற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

- Advertisement -