இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெறலாம் என்பதே தற்போதைய பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. ஏனெனில் 2010 முதல் 3 வகையான காலகட்டங்களில் அவர்கள் இந்தியாவின் வெற்றி நாயகர்களாக அபாரமாக விளையாடி முக்கிய பங்காற்றினர். இருப்பினும் சமீப காலங்களாகவே அவர்கள் வயது காரணமாக தடுமாறி வருகிறார்கள் என்று சொல்லலாம்.
குறிப்பாக பொறுமையுடன் விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தொடர்ந்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டை எதிரணிக்கு பரிசளித்து வருகிறார். இத்தனைக்கும் சச்சினை போல கவர் ட்ரைவ் அடிக்காமல் விளையாடுங்கள் என்று அவருக்கு சில ஜாம்பவான்கள் ஆலோசனை கொடுத்தனர். ஆனால் அதையெல்லாம் கேட்காத விராட் கோலி தொடர்ந்து அப்படியே தன்னுடைய விக்கெட்டை தாரை வார்ப்பது ரசிகர்களை விரக்தியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.
ஓய்வு எப்போது:
மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி வருகிறார். அதனால் அவருடைய தலைமையில் நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் சொந்த மண்ணில் இந்தியா வரலாறு காணாத ஒயிட் பாஸ் தோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய தொடரிலும் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* (5) என்ற கணக்கில் இந்தியா பின் தங்கியுள்ளது.
அதன் காரணமாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் தாராளமாக ஓய்வு பெறலாம் அதற்காக இந்திய அணி பின்னடைவையோ கவலையோ சந்திக்காதது என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேரன் லேமன் தெரிவித்துள்ளார்.
பசங்க ரெடி:
மேலும் அவர்களுடைய இடத்தை நிரப்ப ஜெய்ஸ்வால், நிதிஷ் ரெட்டி போன்ற ஏராளமான திறமையுடைய வீரர்கள் இந்தியாவில் நிறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி லேமன் பேசியது பின்வருமாறு. “அவர்கள் நீண்ட காலமாக இந்தியாவுக்கு சிறந்த வீரர்களாக செயல்பட்டார்கள். எனவே என்ன முடிவெடுத்தாலும் அடுத்த சில நாட்களில் என்ன நடந்தாலும் அவர்கள் சிறந்த வீரர்கள் தான்”
இதையும் படிங்க: அஷ்வின் ஓய்வுபெற்ற நிலையில் அடுத்த போட்டியிலேயே அவரை முந்திய நாதன் லயன் – விவரம் இதோ
“ஆனால் தற்போது இந்தியாவுக்காக வேற லெவலில் இளம் வீரர்கள் விளையாடத் துவங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்திய கிரிக்கெட்டில் திறமையில் தேவையான ஆழம் இருக்கிறது. எனவே நான் அதைப்பற்றி கவலைப்பட மாட்டேன். அந்த 2 வீரர்களும் எப்போது ஓய்வு பெற்றாலும் அந்த இடத்தை நிரப்புவதற்கு ஏராளமான திறமையான இளம் வீரர்கள் இந்திய கிரிக்கெட்டில் இருக்கிறார்கள்” எனக் கூறினார்.



