20 ஆவது ஓவரில் 20 ரன்கள் மட்டுமல்ல.. முதல் பந்திலேயே சம்பவம் நிகழ்த்திய தல தோனி – ரசிகர்கள் கொண்டாட்டம்

Dhoni
- Advertisement -

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்த தொடரில் தங்களது முதல் தோல்வியை பதிவு செய்தது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற சிஎஸ்கே அணியானது டெல்லி அணியை எளிதாக வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் சற்று சருக்களை சந்தித்த சி.எஸ்.கே அணியானது இந்த தொடரில் தங்களது முதல் தோல்வியை பெற்றுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து சென்னை அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்டு 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை குவித்தது.

- Advertisement -

டெல்லி அணி சார்பாக டேவிட் வார்னர் 52 ரன்களையும், ரிஷப் பண்ட் 51 ரன்களையும், ப்ரித்வி ஷா 43 ரன்களையும் குவித்து அகத்தினர். சென்னை அணி சார்பாக மதீஷா பதிரானா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதனை தொடர்ந்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை அணியின் துவக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் சென்னை அணி துவக்கத்திலேயே சரிவை சந்தித்தது இருப்பினும் ரஹானே மற்றும் டேரல் மிட்சல் ஆகியோர் சற்று சமாளித்தாலும் இலக்கு பெரியதாக இருந்ததால் சென்னை அணி தோல்வியை சந்தித்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது கடைசி கட்டத்தில் களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மகேந்திர சிங் தோனி 16 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 37 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் 2 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் அடித்து அசத்திய தோனி இந்த போட்டியில் தான் களமிறங்கிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார்.

இதையும் படிங்க : ஷார்ப்பா இருக்காரு.. ப்ளீஸ் அதை மட்டும் செய்ங்க தோனி.. ஜாம்பவான்கள் பிரட் லீ, வாட்சன் கோரிக்கை

இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரானது அவருக்கு கடைசி சீசனாக பார்க்கப்படும் வேளையில் முதல் இரண்டு போட்டியிலும் பேட்டிங் செய்ய களமிறங்காத தோனி இந்த போட்டியில் எட்டாவது வீரராக களமிறங்கி ஒரு சிறிய சிறப்பான இன்னிங்ஸ்ஸை விளையாடியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சி.எஸ்.கே அணி இந்த போட்டியில் தோற்றாலும் தோனி அடித்த ரன்களே போதும் என்று ரசிகர்கள் அவரது இந்த ஆட்டத்தை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement