ஷார்ப்பா இருக்காரு.. ப்ளீஸ் அதை மட்டும் செய்ங்க தோனி.. ஜாம்பவான்கள் பிரட் லீ, வாட்சன் கோரிக்கை

- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 31ஆம் தேதி நடைபெற்ற 13வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக பிரத்வி ஷா 43, டேவிட் வார்னர் 52, கேப்டன் ரிசப் பண்ட் 51 ரன்கள் எடுத்தனர்.

சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் 1, ரச்சின் ரவீந்திரா 2, சமீர் ரிஸ்வி 0 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அதனால் ரகானே 45, டேரில் மிட்சேல் 34, சிவம் துபே, ஜடேஜா 21, எம்எஸ் தோனி 37* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 171/6 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை தங்களுடைய முதல் தோல்வியை பதிவு செய்தது.

- Advertisement -

பிரட் லீ கோரிக்கை:
மறுபுறம் முதல் வெற்றி கண்ட டெல்லிக்கு அதிகபட்சமாக முகேஷ் குமார் 3, கலில் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக இப்போட்டியில் சென்னை தோல்வியை சந்தித்தாலும் தோனியின் பேட்டிங்கை பார்த்தது ரசிகர்களை கொண்டாட வைத்தது. ஏனெனில் முதல் 2 போட்டிகளில் பேட்டிங் செய்யாத தோனி இப்போட்டியில் களமிறங்கி தன்னுடைய ஸ்டைலில் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 37* (16) ரன்கள் விளாசி அசத்தினார்.

குறிப்பாக வயதானாலும் ஸ்டைல் மாறவில்லை என்பதற்கு அடையாளமாக செயல்பட்ட அவர் அன்றிச் நோர்ட்ஜேவுக்கு எதிரான 20வது ஓவரில் மட்டும் 20 ரன்கள் அடித்து ரசிகர்களை கொண்டாட வைத்தார். இந்நிலையில் இந்தளவுக்கு கூர்மையாக எதிரணிகளை தெறிக்க விடும் தோனி பேட்டிங் வரிசையில் மேலே வந்து அதிக பந்துகளை எதிர்கொண்டு அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்று பிரட் லீ கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இன்றிரவு அவர் துருப்பிடித்தார் போல் விளையாடவில்லை. பேட்டிங்கை பொறுத்த வரை நான் அவரிடமிருந்து அதிகம் விரும்புகிறேன். அவர் சிறந்தவர். அவரது மூளை இன்னும் நன்றாகவும் கூர்மையாகவும் இருக்கிறது. எனவே ப்ளீஸ் சிஎஸ்கே நிர்வாகம் எம்எஸ் தோனியை பேட்டிங் வரிசையில் மேலே இறக்குங்கள்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் ஷேன் வாட்சன் பேசியது பின்வருமாறு. “இந்த போன்ற ஃபார்மில் தோனியிடமிருந்து இதைத்தான் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்”

இதையும் படிங்க: அந்த கவலை கொஞ்சமாவது இருக்கா மஹி.. தோனியை கலாய்த்த ஷாக்சி.. ரிஷப் பண்ட்க்கு ஸ்பெஷல் வாழ்த்து

“அழுத்தமான சூழ்நிலையில் பவுலர்கள் அசத்த துடிக்கும் போது எங்கும் இல்லாத ஒரு ஆட்டத்தை வெல்லும் அவருடைய சக்தி மற்றும் திறமையை நாம் வாழ்க்கை முழுவதும் பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றிரவு அவர் விளையாடிய சில ஷாட்டுகளை இதற்கு முன் அடித்து நான் பார்த்ததில்லை. குறிப்பாக கவர்ஸ் திசையில் அடிப்பது மிகவும் கடினம். ஆனால் அதை இப்போதும் அவர் செய்கிறார். அவர் விளையாட்டுக்கு கொண்டு வரும் ஒளி சிறப்பு வாய்ந்தது” என்று கூறினார்.

Advertisement