அந்த கவலை கொஞ்சமாவது இருக்கா மஹி.. தோனியை கலாய்த்த ஷாக்சி.. ரிஷப் பண்ட்க்கு ஸ்பெஷல் வாழ்த்து

- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 31ஆம் தேதி நடைபெற்ற 13வது லீக் போட்டியில் டெல்லியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை தங்களுடைய முதல் தோல்வியை பதிவு செய்தது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக பிரித்வி ஷா 43, டேவிட் வார்னர் 52, ரிசப் பண்ட் 51 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 2 விக்கெட்டுகள் சாய்த்தார். பின்னர் சேசிங் செய்த சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் 1, ரச்சின் ரவீந்திரா 2 (12), சமீர் ரிஸ்வி 0 ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர். அதனால் ரகானே 45, டேரில் மிட்சேல் 24, சிவம் துபே 18 ரன்கள் எடுத்தும் சென்னையை மீட்டெடுக்க முடியவில்லை.

- Advertisement -

கலாய்த்த மனைவி:
அதே காரணத்தால் கடைசி நேரத்தில் ரவீந்திர ஜடேஜா 21*, எம்எஸ் தோனி 37* ரன்கள் அடித்தும் சென்னை தங்களின் முதல் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. டெல்லி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 3, கலில் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அந்த வகையில் இப்போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் தோனியின் பேட்டிங்கை பார்த்தது சென்னை ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்தது.

ஏனெனில் 42 வயதாகும் அவர் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கைக்வாட் கையில் ஒப்படைத்து சாதாரண விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் கடந்த 2 போட்டிகளில் பேட்டிங் செய்யாத அவர் ஒருவழியாக இந்த போட்டியில் பேட்டிங் செய்ய களமிறங்கினார். அதில் அன்றிச் நோர்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் மட்டும் 4, 6, 0, 4, 0, 6 என 4 அதிரடியான பவுண்டரிகளை தோனி பறக்க விட்டது ரசிகர்களைக் கொண்டாட வைத்தது.

- Advertisement -

அந்த வகையில் அசத்தலாக பேட்டிங் செய்த அவர் மொத்தம் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 37* (16) ரன்கள் அடித்தார். அதற்காக எலக்ட்ரிக் ஸ்டிரைக்கர் ஆஃப் தி மேட்ச் என்ற ஸ்பெஷல் விருதையும் போட்டியில் முடிவில் தோனி சிரித்த முகத்துடன் பெற்றுக் கொண்டார். ஆனால் அதைப் பார்த்த அவருடைய மனைவி சாக்சி “தோல்வியை சந்தித்த சோகம் கொஞ்சமாவது முகத்தில் தெரியுதா பாருங்க” என்ற வகையில் இன்ஸ்டாகிராமில் கலாய்த்துள்ளார்.

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணியை வீழ்த்திய பிறகு முக்கிய மாற்றம் குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் – ரிஷப் பண்ட்

இது பற்றி இன்ஸ்டாகிராமில் சாக்சி கூறியுள்ளார் பின்வருமாறு. “ஹேய் மஹி. நாம் போட்டியில் தோல்வியை சந்தித்தோம் என்பதை உணர முடியவில்லை” என்று சிரிக்கும் ஸ்மைலியை போட்டு கலாய்த்துள்ளார். அத்துடன் காயத்திலிருந்து குணமடைந்த பின் முதல் முறையாக அரை சதமடித்து வெற்றி பெற்ற ரிஷப் பண்ட்க்கு அவர் தெரிவித்துள்ள வாழ்த்து பின்வருமாறு. “அனைத்துக்கும் முதலாக ரிஷப் பண்ட்டுக்கு வரவேற்பு கொடுப்போம்” என்று கூறியுள்ளார்.

Advertisement