சி.எஸ்.கே அணியை வீழ்த்திய பிறகு முக்கிய மாற்றம் குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் – ரிஷப் பண்ட்

Pant
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 17-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 13-ஆவது லீக் ஆட்டத்தில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அணியை வீழ்த்திய அசத்தலான வெற்றியை பெற்றது. பலம் வாய்ந்த சி.எஸ்.கே அணியை வீழ்த்திய டெல்லி அணிக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

அந்தவகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக தைரியமான முடிவை கையில் எடுத்தது. அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை குவித்தது. அந்த அணி சார்பாக வார்னர் மற்றும் பண்ட் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.

- Advertisement -

அதன்பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சி.எஸ்.கே அணியானது இறுதிவரை போராடியும் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். கடந்த போட்டிகளில் செய்த தவறுகளில் இருந்து வெளிவந்து ஒரு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளோம்.

- Advertisement -

கடந்த 2 வாரங்களாகவே ப்ரித்வி ஷா பேட்டிங்கில் தனது பயிற்சிகளை முறையாக மேற்கொண்டு வந்தார். இதுதான் அவருக்கான நேரம் என்று இந்த போட்டியில் அவருக்கு வாய்ப்பளித்தோம். அவரும் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்தி கொண்டார். அதேபோன்று முகேஷ் குமாரும் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க : டெல்லி அணிக்கெதிராக நாங்க தோக்க உண்மையிலேயே இதுதான் காரணம்..வெளிப்படையாக ஒப்புக்கொண்ட – ருதுராஜ் கெய்க்வாட்

ஒரு கிரிக்கெட்டராக நான் என்னுடைய 100 % பங்களிப்பையும் எப்போதும் வழங்க நினைக்கிறன். கடந்த 1.5 ஆண்டுகளாக நான் பெரியளவில் போட்டிகளில் விளையாடவில்லை. இருந்தாலும் தற்போது மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement