IPL 2023 : கெட்ட வார்த்தைல திட்டுவார்னு பயந்தேன் ஆனா பிரட் லீ’யை அவர் தான் எதிர்த்தாரு – 2008இல் ஆஸி வீரரின் உதவியை பகிர்ந்த தோனி

Dhoni
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் 2023 ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. கடந்த 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்ட போது மும்பைக்கு சச்சின், கொல்கத்தாவுக்கு கங்குலி என அந்தந்த மாநில ஜாம்பவான்கள் கேப்டனாக செயல்பட்ட நிலையில் தமிழகத்தில் அந்த சமயத்தில் அந்த மாதிரியான வீரர் இல்லாத காரணத்தால் 2007 டி20 உலக கோப்பை இந்தியாவிற்கு வென்று கொடுத்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தோனியை சென்னை நிர்வாகம் பல கோடி கொடுத்து வாங்கி கேப்டனாக நியமித்தது.

MS Dhoni Adam Gilchrist

- Advertisement -

அப்போதிலிருந்தே இந்திய அணியை போலவே மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் தோனி 4 கோப்பைகளை வென்று கொடுத்து சென்னை 2வது வெற்றிகரமான அணியாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறார். மேலும் 2008இல் விளையாடிய கேப்டன்களில் எஞ்சிய அனைவரும் ஓய்வு பெற்று விட்ட நிலையில் தற்போதும் விளையாடும் ஒரே கேப்டனாக 15 வருடங்கள் கழித்து அசத்தி வரும் தோனி ராஜஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 200 போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட அணியை வழி நடத்திய முதல் கேப்டனாகவும் சரித்திர சாதனை படைத்தார்.

திட்டுவார்னு நினச்சேன்:
இருப்பினும் 199வது போட்டிக்கும் 200வது போட்டிக்கும் என்ன வித்தியாசம் என்று தன்னை பாராட்டியவர்களுக்கு பதிலளித்த அவர் எப்போதுமே வெற்றிகளுக்காக விளையாடுவதாக தெரிவித்தார். முன்னாதாக 2008இல் முதல் முறையாக ஐபிஎல் துவங்கப்பட்ட போது பொதுவாகவே ஸ்லெட்ஜிங் செய்து முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் ஆஸ்திரேலிய வீரர் மேத்தியூ ஹெய்டன் தம்மை திட்டுவார் என்று நினைத்து பயந்ததாக தோனி தெரிவித்துள்ளார்.

hayden 1

ஆனால் பஞ்சாப்புக்கு எதிரான முதல் போட்டியில் எதிரணியில் விளையாடிய ஆஸ்திரேலியாவின் பிரட் லீ பற்றி தமக்கு தெரியும் என்பதால் தாம் எதிர்கொள்கிறேன் எஞ்சிய பவுலர்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஹெய்டன் வகுத்துக்கொடுத்த திட்டத்தை மறக்க முடியாது என்றும் தோனி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆரம்ப காலங்களில் ஐபிஎல் அணிகள் எப்படி செயல்படும் என்ற ஆர்வம் இருந்தது. ஏனெனில் அந்த சமயத்தில் அது மிகவும் புதிய சூழ்நிலைகளாகும். குறிப்பாக அப்போது தான் முதல் முறையாக நீங்கள் வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து விளையாடும் சூழ்நிலை ஏற்பட்டது. அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதும் உங்களுக்கு தெரியாது. எடுத்துக்காட்டாக மேத்யூ ஹைடனை என எடுத்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் அவர் சென்னை அணிக்கு வந்ததும் என்னை இடது வலது மற்றும் நேராக நிற்க வைத்து கெட்ட வார்த்தைகளால் திட்டுவார் என்று நினைத்தேன்”

Hayden

“ஆனால் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டிக்கு முன்பாக அவர் தான் எங்களை அழைத்து எங்களுடைய அணியின் மீட்டிங்கிற்கு தலைமை தாங்கி முக்கியமான திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். குறிப்பாக பிரட் லீ’யை நான் என்று அவர் முதல் திட்டமாக எங்களிடம் தெரிவித்தார். அந்த சமயத்தில் அது எனக்கு சரியாக புரியவில்லை என்பதால் அதைப் பற்றி நான் அவரிடம் விவரமாக கேட்டேன். அப்போது அவர் இறங்கி வந்து பிட்ச்சின் பாதி தூரத்தில் பிரட் லீ’யை எதிர்கொள்வேன் என தெரிவித்தார்”

- Advertisement -

“அடுத்த நாள் நடைபெற்ற போட்டியில் அவர் சொன்னது போலவே 2வது பந்திலேயே இறங்கி சென்று பிரெட் லீ’யை எதிர்கொண்டார். அந்த மாதிரியான அணுகு முறையை அவர் கொண்டிருந்தது மிகவும் வித்தியாசமானது” என்று கூறினார். முன்னாதாக 2008 ஏலத்தில் சில வீரர்கள் ட்ராஃப்ட் முறையில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தோனி தன்னுடைய பெயரை நேரடி ஏலத்தில் பதிவு செய்திருந்தார். அது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.

MS-Dhoni

இதையும் படிங்க:IPL 2023 : உலக கிரிக்கெட்டின் அடுத்த தசாப்தத்தில் அவர் டாமினேட் பண்ண போறாரு – இளம் இந்திய வீரரை பாராட்டிய ஹெய்டன்

“நான் ஏலத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பினேன். குறிப்பாக 3 அணிகளில் மார்க்கியூ வீரர்கள் இல்லாமல் இருந்ததால் 2 அணிகள் என்னை பெரிய தொகைக்கு வாங்கும் என்று நான் நினைத்தேன். அந்த நிலையில் நடைபெற்ற ஏலத்தில் நான் 1.5 மில்லியன் தொகைக்கு வாங்கப்பட்டதை ஏற்கனவே எதிர்பார்த்தேன்” என்று கூறினார்.

Advertisement