அந்த இடத்துல இருந்தா மட்டும் மரியாதையும், விஸ்வாசமும் கிடைக்காது.. தல தோனியின் லேட்டஸ்ட் பேட்டி

MS Dhoni Press
- Advertisement -

நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி இந்தியாவுக்கு 3 விதமான ஐசிசி வெள்ளைப் பந்து உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார். மேலும் 2010இல் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை உலகின் நம்பர் ஒன் அணியாகவும் முன்னேற்றிய அவர் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு அப்போதே வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர்.

அந்த வகையில் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் ஃபினிஷராகவும் கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் பலருக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார். அதனால் எங்கு சென்றாலும் தோனிக்கு அனைத்து இந்நாள் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் மக்களும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து பாராட்டுவது வழக்கமாகும். இந்நிலையில் மரியாதையும் விசுவாசமும் கேப்டன் பதவியிலிருந்து கட்டளை போடுவதால் மட்டும் கிடைத்து விடாது என எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மரியாதை விஸ்வாசம்:
இது பற்றி சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “விஸ்வாசம் என்பது மரியாதை காரணியுடன் நிறைய செய்ய வேண்டும். உடைமாற்றும் அறையை பற்றி நீங்கள் பேசும் போது துணை ஊழியர்கள் அல்லது வீரர்கள் உங்களை மதிக்காவிட்டால் விஸ்வாசத்தை பெறுவது கடினம். அது உண்மையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. என்ன பேசுகிறீர்கள் என்பதை பற்றியது அல்ல. நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம்”

“ஆனால் உங்களுடைய நடத்தை தான் மரியாதையை பெற்றுக் கொடுக்கும். எப்போதும் மரியாதையை சம்பாதிப்பது முக்கியம் என்று கருதுவேன். ஏனெனில் அது நீங்கள் ஒரு நாற்காலி அல்லது தரவரிசையில் இருப்பதால் மட்டும் வந்து விடாது. அது உங்களுடைய நடத்தையுடன் வருகிறது. வீரர்கள் சில சமயங்களில் பாதுகாப்பாற்ற நிலையில் இருப்பார்கள். அதனால் அணி உங்களை நம்பினாலும் உண்மையில் உங்களை நம்பாத முதல் நபராக நீங்கள் இருப்பீர்கள்”

- Advertisement -

“அதை சரி செய்ய அவர்கள் மீது கட்டளை செலுத்தக்கூடாது. மரியாதையை இயற்கையாக பெற வேண்டும். அந்த வகையில் ஒரு முறை நீங்கள் இயற்கையான விஸ்வாசத்தை உருவாக்கி விட்டால் பின்னர் நல்ல செயல்பாடுகள் தாமாக வரும். சிலர் அழுத்தத்தை விரும்புவார்கள். சிலர் விரும்ப மாட்டார்கள். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வது அவசியம்”

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் அணி பெரிய டீம்னு சொல்ல இதுக்கு மேல என்ன வேணும்? – இலங்கை மண்ணில் நடைபெற்ற சம்பவம்

“நீங்கள் அதை செய்தவுடன் இது ஒரு பலவீனம் என்று சொல்லாமல் ஒரு வீரரின் பலவீனத்தில் வேலை செய்ய தொடங்குவீர்கள். எனவே இது ஒரு வீரர் தன்னை சந்தேகிக்காமல் தன்னம்பிக்கையுடன் வைத்திருக்க உதவுகிறது. இது எப்படி வேலை செய்கிறது என்பதை அவர்கள் பார்க்க விரும்புவார்கள். அதே சமயம் யாருக்கு அது என்ன வேலை செய்கிறது என்பதை கண்டுபிடிப்பது ஒரு கேப்டன் அல்லது பயிற்சியாளரின் வேலை” என்று கூறினார்.

Advertisement