ஆப்கானிஸ்தான் அணி பெரிய டீம்னு சொல்ல இதுக்கு மேல என்ன வேணும்? – இலங்கை மண்ணில் நடைபெற்ற சம்பவம்

AFG
- Advertisement -

இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கை அணிக்கெதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது நேற்று பல்லகல்லே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இலங்கை அணியானது ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சிதறடித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 381 ரன்களை குவித்தது. இலங்கை அணி சார்பாக துவக்க வீரரான பதும் நிசாங்கா ஆட்டமிழக்காமல் 210 ரன்களை குவித்தார்.

- Advertisement -

பின்னர் 382 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஒரு கட்டத்தில் 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இருந்தாலும் 6 ஆவது விக்கெட்டிற்கு சாதனை ரன் குவிப்பில் ஈடுபட்டு அற்புதம் நிகழ்த்தியது.

அந்த அணியின் அஸ்மத்துல்லா ஓமர்சாய் மற்றும் முகமது நபி ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 6-ஆவது விக்கெட்டுக்கு 242 ரன்கள் சேர்த்து அசத்தியது. அப்படி இருந்தும் இறுதியில் அவர்களால் 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக இலங்கை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக முகமது நபி 136 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொருபுறம் ஓமர்சாய் 149 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்த போட்டியில் ஆப்கானிஸ்தானை தோல்வியை சந்தித்து இருந்தாலும் அவர்களது இந்த சிறப்பான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பாராட்டினை பெற்றுள்ளது.

இதையும் படிங்க : இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு – 17 பேர் கொண்ட லிஸ்ட் இதோ

அதிலும் குறிப்பாக தற்போது வளர்ந்து வரும் நாடுகளில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆப்கானிஸ்தான அணி இனிமேல் ஒரு பெரிய அணியாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் அவர்களது இந்த சிறப்பான ஆட்டத்தை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement