இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு – 17 பேர் கொண்ட லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சியுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த முன்னணி வீரரான விராட் கோலி டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக தனிப்பட்ட காரணங்களுக்காக அணியிலிருந்து விலகினார்.

- Advertisement -

இருப்பினும் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான டெஸ்ட் அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் இந்த தொடரில் இருந்தே முற்றிலுமாக வெளியேறியுள்ளார். அதே வேளையில் கடந்த இரண்டாவது போட்டியின் போது காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறிய ஜடேஜா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

மேலும் மற்றொரு மாற்றமாக ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறியுள்ளார். அதைதவிர்த்து வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மூன்று போட்டிகளுக்கான டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் நீடிக்கின்றனர்.

- Advertisement -

அதேபோன்று கோலிக்கு மாற்றாக அணியில் இடம் பெற்றிருந்த ரஜத் பட்டிதார் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் தொடர்ச்சியாக அணியில் நீடிக்கின்றனர். அதனை தவிர்த்து இந்திய அணியில் வேறு எதுவும் பெரிய மாற்றங்கள் இல்லை. தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ள அணியில் மொத்தம் 17 வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் முழு வீரர்களின் லிஸ்ட் இதோ :

இதையும் படிங்க : விராட் கோலி எவ்வளவோ பரவால்ல.. இதுக்கு மேல என்ன செய்யணும்.. நானா இருந்தா.. டேல் ஸ்டைன்

1) ரோஹித் சர்மா, 2) ஜஸ்ப்ரீத் பும்ரா, 3) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 4) சுப்மன் கில், 5) கே.எல் ராகுல், 6) ரஜத் பட்டிதார், 7) சர்பராஸ் கான், 8) துருவ் ஜுரேல், 9) கே.எஸ்.பரத், 10) ரவிச்சந்திரன் அஷ்வின், 11) ரவீந்திர ஜடேஜா, 12) அக்சர் படேல், 13) வாஷிங்டன் சுந்தர், 14) குல்தீப் யாதவ், 15) முகமது சிராஜ், 16) முகேஷ் குமார், 17) ஆகாஷ் தீப்.

Advertisement