விராட் கோலி எவ்வளவோ பரவால்ல.. இதுக்கு மேல என்ன செய்யணும்.. நானா இருந்தா.. டேல் ஸ்டைன்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியில் சந்தித்த இந்தியா இரண்டாவது போட்டியில் வென்று தொடரை சமன் செய்துள்ளது. இந்த தொடரில் நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விலகியது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்த சூழ்நிலையில் கடைசி மூன்று போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விராட் கோலியின் எதற்காக விலகினார் என்பதை பற்றி அறிந்து கொள்ள முயற்சித்து அவரை தொல்லை செய்ய வேண்டாம் என்று ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்திருப்பது. அந்த சூழ்நிலையில் விரைவில் இரண்டாவது குழந்தை பிறப்பதால் தன்னுடைய மனைவியுடன் இருக்க விரும்பிய காரணத்தாலேயே விராட் கோலி இங்கிலாந்து தொடரிலிருந்து விலகியதாக அவருடைய நண்பர் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்தார்.

- Advertisement -

என்ன செய்யணும்:
அதனால் சொந்த ஊரில் நடைபெறும் இந்த தொடரில் குடும்பத்துக்காக விராட் கோலி நாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்று சில சலசலப்புகள் காணப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 15 வருடங்களாக விளையாடி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த விராட் கோலி குடும்பத்திற்காக ஓய்வெடுக்கும் உரிமையை கொண்டவர் என டேல் ஸ்டைன் ஆதரவு கொடுத்துள்ளார்.

மேலும் விராட் கோலியாவது குழந்தை பிறப்புக்காக சென்றுள்ளார் ஆனால் தாமாக இருந்தால் செல்லப்பிராணி நாய்க்கு உடல் சரியில்லாமல் போனாலும் வெளியேறி விடுவேன் என்று தெரிவிக்கும் டேல் ஸ்டைன் இது பற்றி பேசியது பின்வருமாறு. “குடும்பத்திற்கு அதிக முன்னுரிமை கொடுப்பது முக்கியம். மன்னிக்கவும் அவ்வளவு தான் இந்த விஷயத்தில் பதிலாகும். என்னுடைய வீட்டில் 3 நாய்கள் இருக்கின்றன. ஒருவேளை அதில் ஒன்றுக்கு உடல் சரியில்லாத சமயத்தில் நான் ஐபிஎல் தொடரில் இருந்தால் உடனடியாக அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி விடுவேன்”

- Advertisement -

இதையும் படிங்க: அந்த இந்திய வீரர் மாதிரி நானும் ஆவரேஜ்க்காக ஆடும் பேட்ஸ்மேன் இல்ல.. முகமது ரிஸ்வான் பேட்டி

“அதுவே குடும்பம். எனவே விராட் கோலி தன்னுடைய இரண்டாவது குழந்தை பிறப்பதை முன்னிட்டு மனைவியுடன் இருப்பதற்காக வீட்டில் உட்கார விரும்பினால் அதில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்தியாவுக்காக பல வருடங்களாக வேலை செய்து வரும் அவர் உலகக் கோப்பையை வென்றுள்ளார். கேப்டனாக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்”

“இதற்கு மேலும் ஒரு மனிதர் கிரிக்கெட் உலகத்தில் தன்னை நிரூபிக்க என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement