அந்த இந்திய வீரர் மாதிரி நானும் ஆவரேஜ்க்காக ஆடும் பேட்ஸ்மேன் இல்ல.. முகமது ரிஸ்வான் பேட்டி

Mohammed Rizwan
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலங்களாகவே தடுமாற்றமாக செயல்பட்டு வெற்றிகளை குவிக்க முடியாமல் திணறி வருகிறது. குறிப்பாக பாபர் அசாம் தலைமையில் 2023 ஆசிய கோப்பையில் வெற்றி காண முடியாத அந்த அணி உலகக் கோப்பையிலும் பரம எதிரி இந்தியா போன்ற அணிகளிடம் தோல்வியை சந்தித்து கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அதன் காரணமாக அனைத்து விதமான கேப்டன்ஷிப் பொறுப்புகளையும் பாபர் அசாம் ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து புதிய கேப்டன்கள் ஷான் மசூட் மற்றும் ஷாஹீன் அப்ரிடி தலைமையில் விளையாடிய பாகிஸ்தான் சமீபத்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் நியூசிலாந்து டி20 தொடரிலும் மீண்டும் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விகளுக்கு பாகிஸ்தான் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக பார்க்கப்படும் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் சுமாராக விளையாடுவது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சராசரிக்காக அல்ல:
குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் இந்த 2 பேருமே அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடாமல் தடுமாறுவது பாகிஸ்தானின் தோல்விகளுக்கு காரணமாக இருக்கிறது. அதனால் அவர்கள் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதற்கு பதிலாக பெரிய ரன்கள் குவித்து தங்களுடைய பேட்டிங் சராசரியை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய வீரர் விராட் கோலி போல தாம் எப்போதுமே பேட்டிங் சராசரிக்காக விளையாடக்கூடிய சராசரியான வீரர் இல்லை என முகமது ரிஸ்வான் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் நீங்கள் விளையாடும் அணிக்காக விளையாட வேண்டும். ஒருவேளை அதற்கு முன்பாக உங்களை நீங்கள் வைத்துக் கொண்டால் முதலில் நம்முடைய இடத்தை காப்பாற்றுவோம் என்ற நிலைமை ஏற்படும். என்னை பொறுத்த வரை பேட்டிங் சராசரியை பார்க்கும் வீரர்கள் சராசரியானவர்கள்”

- Advertisement -

“ஒருவேளை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் அது புள்ளிவிவரத்தில் எதிரொலிக்கும். அதை ரசிகர்களால் பார்க்க முடியும். எடுத்துக்காட்டாக இந்தியாவின் விராட் கோலி தன்னுடைய பேட்டிங் சராசரியை அதிகமாகக் கொண்டுள்ளார். ஆனால் அவர் சராசரியில் கவனம் செலுத்துவதில்லை. ஏனெனில் சராசரியான வீரர்கள் தான் சராசரியில் கவனம் செலுத்துவார்கள்”

இதையும் படிங்க: வெளிநாட்டுல 2 பேர் இருக்காங்க.. ஆனா அந்த விஷயத்துல பும்ரா மாதிரி யாரும் கிடையாது.. டேல் ஸ்டைன்

“விராட் கோலி போன்ற பெரிய வீரர்கள் அணியின் நலனுக்காக சூழ்நிலையை பார்த்து விளையாடுவார்கள். அந்த வகையில் அணிக்கு என்ன தேவைப்படுகிறது என்பதில் நான் கவனம் செலுத்துகிறேன். எனவே ரிஸ்வான் நீங்கள் ஸ்கோர் போர்டை பார்த்து விளையாடுங்கள் என்று அணி நிர்வாகம் கேட்டால் அதற்கு தகுந்தார் போல் செயல்படுவேன். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பந்து பழையதாகி விட்டால் விளையாடுவது எளிதல்ல. அது மனதளவிலான ஆட்டமாகும்” என்று கூறினார்.

Advertisement