வெளிநாட்டுல 2 பேர் இருக்காங்க.. ஆனா அந்த விஷயத்துல பும்ரா மாதிரி யாரும் கிடையாது.. டேல் ஸ்டைன்

Dale Styen
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. மேலும் இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு 9 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.

அதன் காரணமாக ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். மேலும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான ஐசிசி தரவரிசையிலும் நம்பர் ஒன் பிடித்த முதல் பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையையும் பும்ரா படைத்துள்ளார்.

- Advertisement -

ஸ்டைன் பாராட்டு:
முன்னதாக விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் ஓலி போப்பின் 3 ஸ்டம்ப்களையும் பும்ரா துல்லியமான யார்க்கர் பந்தால் பறக்க விட்டது ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. அதே போல அவருடைய துல்லியமான யார்க்கர் பந்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய கையில் இருந்த பேட்டைக்கு கீழே விட்டு கிளீன போல்ட்டாகி நிராயுதபாணியாக நின்றது ரசிகர்களை புல்லரிக்க வைத்தது.

இந்நிலையில் பிட்ச் எப்படி இருந்தாலும் ட்ரெண்ட் போல்ட், மிட்சேல் ஸ்டார்க் ஆகியோரை விட துல்லியமான யார்கர் பந்தை வீசுவதில் வித்யாசமான ஆக்சனுடன் ஜஸ்ப்ரித் பும்ரா அபார திறமை கொண்டிருப்பதாக தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டைல் பாராட்டியுள்ளார். மேலும் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் அனைத்து நாடுகளிலும் பும்ரா அசத்துவதாக பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவர் அற்புதமான பவுலர். அவர் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்டிருப்பதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை”

- Advertisement -

“பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லாத பிட்ச்களில் கூட விக்கெட்டுகளை எடுக்கும் அவர் அற்புதமானவர். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓடி வந்து விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய யார்க்கர் பந்துகளை வீசும் தரமான பவுலர்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அந்த வழியில் கைவிட்டு எண்ணக்கூடிய பவுலர்கள் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை எடுப்பார்கள்”

இதையும் படிங்க: 55/5 என சரிந்த ஆப்கானிஸ்தான்.. இலங்கைக்கு டஃப் கொடுத்த நபி – ஓமர்சாய் ஜோடி.. சோதனையிலும் உலக சாதனை

“ட்ரெண்ட் போல்ட் ஒருவர். மிட்சேல் ஸ்டார்க் இருக்கலாம். அதில் பும்ரா கண்டிப்பாக இருப்பார். ஒரு நல்ல யார்க்கர் பந்தை இந்தியா அல்லது தென்னாப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியா போன்ற எங்கே வேண்டுமானாலும் வீசலாம் என்று நான் சொல்லி கேட்டுள்ளேன். ஏனெனில் நல்ல யார்க்கர் பந்தை நீங்கள் வீசுவதற்கு பிட்ச்சை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். யார்க்கர் பந்துக்கும் பிட்ச்சுக்கும் சம்பந்தமில்லை. அதை நீங்கள் வெளியில் எடுத்து விடுவீர்கள். அந்த ஒரு விஷயத்தை அவர் சிறப்பாக செய்கிறார் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார்.

Advertisement