- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலி, ரோஹித் மாதிரி சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இல்லாதது ஏன்? தல தோனி விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். ஏனெனில் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக உலக சாதனை படைத்துள்ள அவருடைய தலைமையில் 2010ஆம் ஆண்டு இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாகவும் முன்னேறியது. அதே போல ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 கோப்பைகளை வென்ற அவர் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

ஆனால் இவ்வளவு பெருமைகளைக் கொண்ட அவர் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருப்பது வழக்கமாகும். இப்போதெல்லாம் நம்மில் பலரும் சாப்பிடுவதை கூட புகைபடமாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கமாகி விட்டது. மேலும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற கிரிக்கெட்டில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பது வழக்கமாகும்.

- Advertisement -

நோ சோசியல் மீடியா:
அத்துடன் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற சில வீரர்கள் யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோ வாயிலாக ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மத்தியில் இந்தியா வென்றாலும் தோற்றாலும் சிஎஸ்கே கோப்பையை முத்தமிட்டாலும் தோனி சமூகவலைதளங்களில் எதையும் பதிவிடாமல் அமைதியாகவே இருப்பார். இந்நிலையில் சமூக வலைதளங்களால் கவனசிதறல் ஏற்படுவதாலேயே அதிலிருந்து விலகியிருப்பதாக தோனி தெரிவித்துள்ளார்.

அத்துடன் ட்விட்டரை விட இன்ஸ்டாகிராமில் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்ததற்கான காரணத்தைப் பற்றி அவர் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ட்விட்டருக்கு பதிலாக நான் இன்ஸ்டாகிராமை தேர்வு செய்வேன். ட்விட்டரில் எதுவும் நல்லது நடப்பதாக நான் நம்பவில்லை. குறிப்பாக அங்கே சிலர் எழுதுவது சர்ச்சையை ஏற்படுத்துகிறது. எனவே நான் ஏன் அங்கே இருக்க வேண்டும்? அங்கே 140 எழுத்துக்களுக்கு மேல் எதையும் சொல்ல முடியாது என்பது உங்களுக்கு தெரியும்”

- Advertisement -

“எனவே நான் அங்கே ஏதாவது எழுதி மீதியை மக்களிடம் விட்டால் அவர்கள் அதை விரும்பும் வகையில் மாற்றி விடுவார்கள். எனவே அது எனக்கு சரியாக தெரியவில்லை. இன்ஸ்டாகிராமில் என்னால் படம் அல்லது வீடியோவை மட்டும் போட்டுவிட்டு வெளியேற முடியும். அதுவும் தற்போது மாறி வருகிறது. இருப்பினும் இன்ஸ்டாகிராமை நான் தேர்ந்தெடுப்பேன். ஆனால் அங்கேயும் ஆக்டிவாக இருக்க மாட்டேன்”

இதையும் படிங்க: ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறி சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றதும் தோனி செய்த முதல் செயல் – இவர் இன்னும் மாறல

“ஏனெனில் கவனசிதறல் குறைவாக இருப்பது நல்லதாக நான் கருதுகிறேன். ரசிகர்கள் நான் எங்கே இருக்கிறேன் என்பதை தெரிந்து கொள்வதற்காக மட்டும் சிலவற்றை பதிவிடுவேன்” என்று கூறினார். அத்துடன் வருடம் முழுவதும் கிரிக்கெட்டில் விளையாடாமல் நேரடியாக ஐபிஎல் தொடரில் களமிறங்குவது கடினமானது என்று தோனி கூறியுள்ளார். இருப்பினும் சமூக வலைதளங்களை ஒதுக்கிவிட்டு ஃபிட்னஸில் கவனம் செலுத்துவதால் தம்மால் வெற்றிகரமாக விளையாட முடிவதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -