ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் 49வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 99% இழந்த சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அப்போட்டியில் சென்னை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கேப்டன் தோனி அறிவித்தார்.
பொதுவாக தரமான வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களை வைத்து சிறப்பாக விளையாடக்கூடிய சென்னை தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவிப்பதற்கு பெயர் போன அணியாகும். ஆனால் இம்முறை ஆரம்பம் முதலே பேட்டிங்குழந்தை அதிரடியாக ரன்கள் அடிக்க சிஎஸ்கே தடுமாறியது. அதனால் ருதுராஜ் காயத்தால் வழங்கிய பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற தோனி சில மாற்றங்களை செய்து பார்த்தார்.
மாற்றங்கள் ஏன்:
அப்படியிருந்தும் வெற்றிப் பாதைக்கு திரும்பாத சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பைக் கிட்டத்தட்ட இழந்து விட்டது. அதனால் ஏமாற்றமடைந்த தோனி ஓரிரு ஓட்டைகள் இருந்தால் அதை அடைக்கலாம் அணி முழுவதும் ஓட்டையாக இருந்தால் எப்படி அடைப்பது? என்று ஆதங்கத்துடன் பேசினார். அதே சமயம் அடுத்த வருடம் தரமான வீரர்களுடன் சிஎஸ்கே கம்பேக் கொடுக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையே 43 வயதாகும் தோனி அடுத்த வருடம் விளையாடுவாரா என்ற கேள்வியும் காணப்படுகிறது. அது பற்றி இன்றைய போட்டியில் டாஸ் வீசும் நிகழ்வில் தொகுப்பாளர் டேனி மோரிசன் கேட்டது பின்வருமாறு. “உங்களுக்கு ரசிகர்களிடம் காணப்படும் வரவேற்பை பாருங்கள். இதற்கான அர்த்தம் அடுத்த வருடமும் நீங்கள் கம்பேக் கொடுத்து விளையாடுவீர்களா?” என்று கேட்டார்.
ஜாலியான தோனி:
அதற்கு 2026 இருக்கட்டும் முதலில் அடுத்தப் போட்டியில் வருவேனா என்பதே தெரியவில்லை என்று ஜாலியாக பதிலளித்த தோனி சிஎஸ்கே அணியில் நிகழ்த்தப்பட்ட மாற்றங்களுக்கான காரணம் பற்றி பேசியது பின்வருமாறு. “அடுத்தப் போட்டியில் நான் விளையாட வருவேனா என்பதை எனக்குத் தெரியவில்லை. ஒரு விஷயம் என்னவெனில் இவை அனைத்தும் பெருமைக்குரியதாகும். சொந்த மண்ணில் நீங்கள் பெரும்பாலானப் போட்டிகளில் விளையாடும் போது அங்குள்ள சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். ஆனால் இதுவரை நாங்கள் அதை சரியாக செய்யவில்லை”
இதையும் படிங்க: இனிமே தான் வைபவ் சூர்யவன்ஷி இன்னும் உஷாரா இருக்கனும்.. காரணத்தை கூறி – எச்சரித்த ரவி சாஸ்திரி
“இன்று எங்கள் அணியில் மாற்றம் இல்லை. நாங்கள் அதிகம் மாற்றங்கள் செய்யக்கூடிய அணி கிடையாது. ஆனால் இந்த வருடம் செய்தோம். ஏனெனில் உங்களுடைய பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் ஓரிரு மாற்றங்கள் மட்டுமே செய்வீர்கள். ஆனால் இந்த வருடம் அது எங்களுக்கு நடைபெறாததால் மாற்றங்கள் செய்தோம். இது புதிய ஏலத்துக்கு பின் எங்களுடைய முதல் ஐபிஎல் தொடராகும். எனவே அதை மனதில் வைத்து பேட்ஸ்மேன்கள் எனகே பொருந்துவார் என்பதைப் பார்க்க வேண்டும்” எனக் கூறினார்.



