கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரரான வைபவ் சூரியன்வன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்ததோடு மட்டுமின்றி 38 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 11 சிக்ஸர்கள் என 101 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் 14 வயதான அவர் குறைந்த வயதில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையும் நிகழ்த்தி இருந்தார்.
இனிதான் வைபவ் சூர்யவன்ஷி உஷாரா இருக்கனும் : ரவி சாஸ்திரி எச்சரிக்கை
கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தின் போது 1 கோடியே 10 லட்ச ரூபாய் என்கிற விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் இப்படி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
மேலும் இன்னும் பல ஆண்டுகள் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்றும் எதிர்காலத்தில் இந்திய அணிக்கும் மிக முக்கிய வீரராக திகழ்வார் என்றும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இப்படி பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மட்டும் அவரை எச்சரித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : லக்னோ அணிக்கு எதிரான முதல் போட்டியில் முதல் பந்திலேயே அவர் சிக்ஸ் அடித்தது அனைவரையும் மூச்சடையை வைத்திருக்கும். தற்போது மிகவும் இளம் வீரராக இருக்கும் அவர் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். மேலும் அவரின் மீது நாம் அழுத்தத்தை கொடுக்கக் கூடாது.
ஏனெனில் இந்த வயதில் தோல்வியும் வரும். மக்களும் நிறைய விமர்சிப்பார்கள் அதையெல்லாம் அவர் எவ்வாறு கையாள கையாள்கிறார் என்பதை பார்க்க வேண்டும். மேலும் அடுத்தமுறை அவர் பேட்டிங் செய்ய களத்திற்கு வரும்போது பௌலர்களும் அவர் மீது கருணை காட்ட மாட்டார்கள். ஏனெனில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் உங்களின் மீது பவுலர்கள் ஆதிக்கம் செலுத்து நினைப்பார்கள்.
இதையும் படிங்க : பாண்டிங் மற்றும் சச்சின் தான் இன்னைக்கு நான் நல்ல நிலையில் இருக்க காரணம் – பிரப்சிம்ரன் சிங் வெளிப்படை
உங்களுடைய வயது 10, 14, 24 என்றெல்லாம் பார்க்காமல் உங்களுக்கு எதிராக இன்னும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார்கள். எனவே இனிவரும் போட்டிகளில் அவர் பந்துவீச்சாளர்களை எவ்வாறு கையாளப்போகிறார் என்பதை திட்டமிட்டு அதற்கு ஏற்றபடி செயல்பட வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.



