பாண்டிங் மற்றும் சச்சின் தான் இன்னைக்கு நான் நல்ல நிலையில் இருக்க காரணம் – பிரப்சிம்ரன் சிங் வெளிப்படை

PrabhSimran Singh
- Advertisement -

பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் கடந்த 2019 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக அறிமுகமாகி இதுவரை 43 போட்டியில் விளையாடி ஒரு சதம் மற்றும் 5 அரைசதம் என 1048 ரன்களை குவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவரை கடந்த ஆண்டு நடைபெற்ற முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு பின்னர் அந்த அணி 4 கோடி ரூபாய் என்கிற தொகைக்கு தக்கவைத்தது.

பாண்டிங்கும், சச்சினும் எனக்கு ஆதரவு அளித்தார்கள் : பிரப்சிம்ரன் சிங்

அதனை தொடர்ந்து நடப்பு 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் துவக்க வீரராக விளையாடி வரும் அவர் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 168 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 294 ரன்கள் அடித்துள்ளார். அதில் இரண்டு அரை சதங்களும் அடங்கும். அவரது அதிரடியான துவக்கம் காரணமாக பஞ்சாப் அணி பல போட்டிகளில் வெற்றி பெற்று வருவது பலரது மத்தியிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இன்று தான் இப்படி சிறப்பான அதிரடி வீரராக நிலைத்து நிற்க காரணமே பாண்டிங் மற்றும் சச்சின் ஆகியோர் கொடுத்த அறிவுரைகள் தான் என பிரப்சிம்ரன் சிங் பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில் : பஞ்சாப் அணி நிர்வாகம் 2 வீரர்களை தக்க வைக்க நினைத்தபோது ஒருநாள் இரவு ரிக்கி பாண்டிங் எனக்கு மெசேஜ் செய்தார்.

அப்போது நான் ஆசிய வீரர்களுக்கான எமர்ஜிங் கோப்பை தொடர்கான இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது பாண்டிங்குடன் கொஞ்ச நேரம் தொலைபேசியில் சேட் செய்து கொண்டிருந்தேன். அப்போது அவர் பஞ்சாப் அணியில் என்னை தக்க வைக்க விரும்புவதாக செய்தி அனுப்பியிருந்தார்.

- Advertisement -

மேலும் உன்னிடம் நல்ல திறமை இருக்கிறது என்றும் உனக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்றும் என்னிடம் கூறினார். அவர் கொடுத்த அந்த ஊக்கம் என்னை இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வைத்துள்ளது. அதோடு இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் இடமும் நான் பேசினேன். அவர் என்னிடம் :

இதையும் படிங்க : சுனில் நரேனை சமாளிக்க ஒரு மீட்டிங்கையே மும்பை இந்தியன்ஸ் ஏற்பாடு பண்ணாங்க – சுவாரசிய தகவலை பகிர்ந்த அம்பத்தி ராயுடு

“நீ நீண்ட காலம் காத்திருந்து இந்த வாய்ப்பினை பெற்றுள்ளாய்.” உன்னுடைய இடத்திற்கு விளையாட மற்ற வீரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனவே தொடர்ந்து ஆட்டத்தை கற்றுக்கொண்டு மென்மேலும் சிறப்பாக விளையாட கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறினார். அவர் கொடுத்த அறிவுரை தான் என்னை இன்னும் கடினமாக உழைக்க வைத்தது என பிரப்சிம்ரன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement