- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலி உலகிலேயே சிறந்தவர்.. இந்தியாவுக்காக அதை நாங்க ஜாலியா செஞ்சோம்.. தல தோனி பேட்டி

நட்சத்திர இந்திய வீரர்கள் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறந்த குரு சிஷ்யர்களாக போற்றப்படுகின்றனர். கடந்த 2008ஆம் ஆண்டு தோனி தலைமையில் அறிமுகமான விராட் கோலி கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடினார். இருப்பினும் திறமையை அறிந்த தோனி தொடர்ந்து 3 வகையான இந்திய அணியிலும் விராட் கோலிக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுத்தார்.

குறிப்பாக ஒருமுறை தேர்வுக் குழுவினர் விராட் கோலியை நீக்கி விரும்பியதாகவும் அப்போது தோனி தான் ஆதரவு கொடுத்ததாகவும் வீரேந்திர சேவாக் தெரிவித்தது ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அதே சமயம் குறுகிய காலத்திலேயே தோனியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படத் துவங்கிய விராட் கோலி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அதனாலேயே 2014ஆம் ஆண்டு அவரிடம் டெஸ்ட் கேப்டன்ஷிப் பொறுப்பை ஒப்படைத்து தோனி விலகினார்.

- Advertisement -

தோனி – கோலி:
அத்துடன் 3 விதமான ஐசிசி கோப்பைகளை வென்றிருந்தும் 2017 முதல் விராட் கோலி தலைமையில் சாதாரண வீரராக தோனி விளையாடினார். மறுபுறம் பொறுப்பில் இல்லை என்றாலும் தோனி தான் எப்போதுமே தன்னுடைய கேப்டன் என்று விராட் கோலி பலமுறை கூறியுள்ளார். மேலும் 2019க்குப்பின் சதமடிக்காமல் தவித்த காலங்களில் தோனி மட்டுமே தமக்கு மெசேஜ் செய்து ஆதரவு கொடுத்ததாகவும் விராட் கோலி தெரிவித்திருந்தார்.

அதை விட 2021 ஐபிஎல் தொடரில் அசத்திய தோனியை மிகச்சிறந்த ஃபினிஷர் என்று ட்விட்டரில் பதிவிட்ட விராட் கோலி ஒரு ரசிகனை போல கொண்டாடினார். அந்தளவுக்கு விராட் கோலியும் தோனியும் கிரிக்கெட்டை தாண்டிய நட்பை கொண்டுள்ளனர். இந்நிலையில் உலக கிரிக்கெட்டில் விராட் கோலி மிகச் சிறந்தவர் என்று தோனி பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இந்தியாவுக்காக அவருடன் இணைந்து விளையாடியது பற்றி சமீபத்திய பேட்டியில் தோனி பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்காக நாங்கள் நீண்ட காலம் இணைந்து விளையாடிய சக வீரர்கள். உலக கிரிக்கெட் என்று வரும் போது விராட் கோலி தலைசிறந்தவர். உண்மையில் மிடில் ஓவர்களில் அவருடன் சேர்ந்து நான் நிறைய பேட்டிங் செய்துள்ளேன். அது மிகவும் ஜாலியாக இருக்கும்”

இதையும் படிங்க: டேவிட் வார்னரை முந்திய ஹிட்மேன் ரோஹித்.. இயன் மோர்கனையும் மிஞ்சி கேப்டனாக புதிய உலக சாதனை

“ஏனெனில் நாங்கள் நிறைய டபுள் மற்றும் ட்ரிபிள் ரன்களை ஓடி எடுப்போம். எனவே அது எப்போதுமே வேடிக்கையாக இருக்கும். இருப்பினும் தற்போது நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது நாங்கள் சில நேரங்கள் பல்வேறு விஷயங்களை பேசுவோம். குறிப்பாக அனைத்தும் எப்படி செல்கிறது என்பது பற்றி பேசுவோம். அப்படித் தான் எங்களுடைய உறவு இருக்கிறது” என்று கூறினார்.

- Advertisement -