டேவிட் வார்னரை முந்திய ஹிட்மேன் ரோஹித்.. இயன் மோர்கனையும் மிஞ்சி கேப்டனாக புதிய உலக சாதனை

Rohit Sharma 7
- Advertisement -

இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி கொழும்பு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 230 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துணித் வெல்லலாகே 67, நிசாங்கா 56 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 58 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் கில் 16, விராட் கோலி 25, வாஷிங்டன் சுந்தர் 5, ஸ்ரேயாஸ் ஐயர் 23, ராகுல் 31, அக்ஸர் பட்டேல் 33 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். கடைசியில் பினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சிவம் துபேவும் 25 ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

ரோஹித் உலக சாதனை:
இறுதியில் 1 விக்கெட் கைவசம் இருந்த நிலையில் 1 ரன் தேவைப்பட்ட போது சிங்கிள் எடுக்க முயற்சிக்காமல் அதிரடி காட்டிய அர்ஷ்தீப் சிங் டக் அவுட்டாகி வெற்றியை நழுவ விட்டார். அதனால் டி20 தொடரில் இந்தியா சந்தித்த தொடர் தோல்விகளை நிறுத்தியுள்ள இலங்கை நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அசலங்கா மற்றும் ஹசரங்கா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இருப்பினும் இப்போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு விருது படைத்தார். 2024 டி20 உலகக் கோப்பையில் சொந்த சாதனைகளை பற்றி கவலைப்படாமல் அடித்து நொறுக்கி அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவினார். அதே வேகத்தில் இந்த போட்டியிலும் பட்டையை கிளப்பிய அவர் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 58 (47) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இந்த 58 ரன்களையும் சேர்த்து அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் துவக்க வீரராக 352 இன்னிங்ஸில் 15000 ரன்கள் கடந்தார். அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் வேகமாக 15000 ரன்கள் அடித்த இரண்டாவது 2வது வீரர் என்ற ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் சாதனையை உடைத்த ரோகித் புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல் (இன்னிங்ஸ்):
1. சச்சின் டெண்டுல்கர் : 331
2. ரோஹித் சர்மா : 352*
3. டேவிட் வார்னர் : 361
4. விரேந்தர் சேவாக் : 363
5. கிரேம் ஸ்மித் : 368

இதையும் படிங்க: கடைசி 18 பந்தில் 5 ரன்கள்.. சிரிப்பு வந்தவுடன் ஷாக் கொடுத்த இலங்கை அணியின் கேப்டன் – நடந்தது என்ன?

அது போக இப்போட்டியில் அடித்த மூன்று சிக்ஸர்களையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன் என்ற இயன் மோர்கன் சாதனையும் உடைத்துள்ள ரோஹித் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 234*
2. இயன் மோர்கன் : 233
3. எம்.எஸ். தோனி : 211
4. ரிக்கி பாண்டிங் : 171
5. ப்ரண்டன் மெக்கலம் : 170

Advertisement