- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தல ஃபார் ரீசன்னா என்னனு எனக்கே தெரியாது.. அவசியமில்லாதப்போ செய்றாங்க.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ். தோனி மிகச் சிறந்த கேப்டனாக போற்றப்படுகிறார். கடந்த 2004 – 2019 வரை இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அவர் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக சாதனை படைத்துள்ளார். அதை விட அவரது தலைமையில் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றது.

அதனால் உலகிலேயே 3 விதமான வெள்ளைப்பந்து ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக தோனி சாதனை படைத்துள்ளார். அதே போல ஐபிஎல் தொடரிலும் 5 கோப்பைகளை வென்றுள்ள அவர் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் ஃபினிஷராகவும் கேப்டனாகவும் செயல்பட்ட தோனியின் ஜெர்ஸி நம்பர் 7 மிகவும் புகழ் பெற்றதாக இருக்கிறது.

- Advertisement -

தல ஃபார் ரீசன்:
அதை அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக கிரிக்கெட்டில் ஏதேனும் சாதனைகள் அல்லது புள்ளிவிவரம் 7 என்ற நம்பரை தொடர்பு கொள்ளுமாறு இருந்தால் அதற்கு “தல தோனி தான் காரணம்” என்று சிஎஸ்கே ரசிகர்கள் பேசுவது வழக்கமாகும். நாளடைவில் அதுவே உலகளவில் பலராலும் பல்வேறு விஷயங்களுக்காக “தல ஃபார் ரீசன்” என்று ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது.

அதன் உச்சமாக சமீபத்தில் ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 7வது ஜெர்சி நம்பரை அணிந்து விளையாடும் கிறிஸ்டியானோ ரொனால்டோவை தல ஃபார் ரீசன் என்ற தலைப்புடன் பதிவிட்டு வரவேற்றது. இந்நிலையில் ஆரம்பத்தில் தமக்கும் அது பற்றி தெரியாது என்று எம்.எஸ். தோனி கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் கேட்ட போது தோனி கூறியது பின்வருமாறு.

- Advertisement -

“எனக்கே இந்த ட்ரெண்ட் என்ன என்பது தெரியாது. இன்ஸ்டாகிராமில் தான் அதை நான் தெரிந்து கொண்டேன். எனவே என்னுடைய ரசிகர்களுக்காக நான் நன்றியுடைவனாக இருக்கிறேன். சமூக வலைதளத்தில் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. சோசியல் மீடியா அல்லது இன்ஸ்டாகிராமில் வந்து எதையும் சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை”

இதையும் படிங்க: தோனி தான் இன்ஷ்பைரேசன்.. அவர்கிட்ட இதை கத்துக்கிட்டேன்.. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஸ்வப்னில் பேட்டி

“ஆனால் தேவைப்படும் நேரங்களில் எனது ரசிகர்கள் எனக்காக அதை செய்கின்றனர். அவசியமான நேரத்தில் அவர்கள் என்னை பாராட்டுகின்றனர். நான் எதையும் செய்ய வேண்டியதில்லை. எனவே எனது ரசிகர்களுக்காக நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். சமூக வலைதளத்தில் நான் ஆக்டிவாக இருப்பதில்லை. இருப்பினும் அவர்கள் நான் பதிவு செய்வதற்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் அதை விரும்புகிறார்கள்” என்று கூறினார்.

- Advertisement -