தோனி தான் இன்ஷ்பைரேசன்.. அவர்கிட்ட இதை கத்துக்கிட்டேன்.. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஸ்வப்னில் பேட்டி

Swapnil Kusale
- Advertisement -

பாரிஸ் நகரில் ஒலிம்பிக் 2024 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வெல்வதற்காக போராடி வருகின்றனர். அந்த வரிசையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆண்கள் பிரிவுக்கான 50 மீட்டர் ரைஃபல் 3 நிலைக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார்.

அதனால் மனு பாக்கர் மற்றும் சரபோத்ஜித் சிங் ஆகியோரை தொடர்ந்து பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு அவர் 3வது பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். அத்துடன் அபினவ் பிந்த்ரா மற்றும் ககன் நரங் ஆகியோருக்கு பின் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் இந்தியாவுக்கு பதக்கத்தை வென்று கொடுத்த 3வது வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார். அதனால் அவருக்கு ஏராளமானவர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

- Advertisement -

தோனி வழியில்:
இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி போல தாமும் ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்டர் வேலை செய்வதாக ஸ்வப்னில் குசாலே தெரிவித்துள்ளார். அந்த வகையில் தோனி தமக்கு உத்வேகத்தை கொடுத்ததாக ஸ்வப்னில் கூறியுள்ளார். மேலும் தம்முடைய விளையாட்டில் வெற்றி பெறுவதற்கு அமைதியும் பொறுமையும் தான் தேவை என்று அவர் கூறியுள்ளார்.

அதை தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டதாக தெரிவிக்கும் ஸ்வப்னில் இது பற்றி பதக்கம் வென்ற பின் பேசியது பின்வருமாறு. “ஒரு நல்ல மனிதராக எம்எஸ் தோனியை நான் ரசிக்கிறேன். என்னுடைய விளையாட்டில் வெற்றி காண்பதற்கு நான் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். அதே போலவே தோனி களத்தில் பொறுமையாக இருப்பார்”

- Advertisement -

“நானும் அவரைப் போலவே டிக்கெட் கலெக்டராக இருந்தேன். எனவே அவருடைய கதைக்கு நானும் தொடர்புடையவனாக இருக்கிறேன். துப்பாக்கி சுடுதலில் நான் யாரையும் பின்பற்றுவதில்லை. ஆனால் மற்ற விளையாட்டில் தோனி எனக்கு மிகவும் பிடித்தவர்” என்று கூறினார். 1995ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த ஸ்வப்னில் சிங் 2012 முதல் துப்பாக்கி சுடும் விளையாட்டில் விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க: இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் நாள் தொடரில் இருந்து விலகிய 2 நட்சத்த்திர வீரர்கள் – விவரம் இதோ

மேலும் 2015 முதல் மத்திய இந்திய ரயில்வே துறையிலும் அவர் டிக்கெட் கலெக்டர் வேலை செய்தார். அந்த வகையில் விளையாடத் துவங்கிய 12 வருடங்கள் கழித்து தற்போது முதல் முறையாக அவர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு தோனி உத்வேகமாக இருக்கிறார் என்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement