இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் நாள் தொடரில் இருந்து விலகிய 2 நட்சத்த்திர வீரர்கள் – விவரம் இதோ

IND-vs-SL-ODI
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது அண்மையில் இலங்கை நாட்டில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இலங்கை அணியை சுருட்டி அசத்தலான வெற்றியை பதிவு செய்து;

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அணிக்கு திரும்பியுள்ளதால் இங்கு தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது.

- Advertisement -

அதேபோன்று கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக வந்து முதல் ஒருநாள் தொடரில் பங்கேற்ப இருப்பதாலும் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் இருந்து இலங்கை அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்களான மதீஷா பதிரானா மற்றும் தில்ஷான் மதுஷங்கா ஆகியோர் விலகுவதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளன.

- Advertisement -

அதன்படி இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது பீல்டிங்கின் போது ஏற்பட்ட காயம் காரணமாக பதிரானா தற்போது இந்த தொடரில் இருந்து விலகுவதாக கூறப்பட்டுள்ளது. அதேபோன்று மற்றொரு வீரரான மதுஷங்கா ஃபீல்டிங் பயிற்சியின்போது காயம் அடைந்ததன் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2025 தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவீர்களா? ரசிகரின் கேள்விக்கு தோனி கொடுத்த பதில்

ஏற்கனவே இந்திய அணியை எதிர்கொள்ள திணறி வரும் இலங்கை அணியானது இவர்கள் இருவரது விலகல் காரணமாக மேலும் பின்னடைவை சந்தித்துள்ளது. இவர்கள் இருவருக்கு பதிலாக மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement