- Advertisement -
ஐ.பி.எல்

மொத்த சிஎஸ்கே’வும் ஓட்டைன்னா எப்படி அடைக்கிறது? மாறிப்போன அதை புரிஞ்சுக்கிட்டு மாறனும்.. தோனி வேதனை

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 43வது போட்டியில் ஹைதராபாத் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. சேப்பாக்கத்தில் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை 155 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக தேவால்ட் ப்ரேவிஸ் 42, ஆயுஷ் மாத்ரே 30 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய ஹைதராபாத் 18.4 ஓவரில் இலக்கைத் தொட்டு தங்களுடைய 3வது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்துக்கு முன்னேறியது. அந்த அணிக்கு கமிண்டு மெண்டிஸ் 32*, இஷான் கிசான் 44 ரன்கள் எடுத்து வெற்றியில் பங்காற்றினர். சென்னைக்கு அதிகபட்சமாக நூர் அஹ்மத் 2 விக்கெட்டுகள் எடுத்தும் 7வது தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

சென்னையின் பரிதாபம்:

அதனால் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தில் திண்டாடும் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை 99% கோட்டை விட்டுள்ளது. பொதுவாக தொடர் வெற்றிகளைப் பெறுவதற்கு பெயர் போன சென்னை இம்முறை இப்படி பாதாளத்தில் தவிப்பது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ஒரு ஓட்டை இருந்தால் அடைக்கலாம் ஆனால் 2025 சிஎஸ்கே அணி முழுவதுமே ஓட்டையாக இருந்தால் என்ன செய்வது என்று கேப்டன் தோனி வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் 200 ரன்களை அடித்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலைக்கு டி20 ஆட்டம் மாறியுள்ளதாக தோனி கூறியுள்ளார். அந்த ஆட்டத்தில் 150 ரன்களை அடித்தால் வெற்றி பெற முடியாது என்பதைப் புரிந்து கொண்டு தங்களுடைய அணி முன்னேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி தோனி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

தோனி வேதனை:

“ஐபிஎல் போன்ற இந்தத் தொடரில் உங்களது அணியில் அடைப்பதற்கு ஓரிரு ஓட்டைகள் இருந்தால் நல்லது. ஆனால் பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லையெனில் வெற்றி கடினமாகி விடும். ஏனெனில் அதன் காரணமாக நீங்கள் மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறீர்கள். உங்களது பெரும்பாலான வீரர்கள் நன்றாக செயல்பட்டால் அவர்களுக்கு நீங்களும் எக்ஸ்ட்ரா வாய்ப்பு வழங்குவீர்கள்”

இதையும் படிங்க: ப்ரேவிஸ் அசத்தியும் நல்ல பிட்ச்சில் சிஎஸ்கே தோற்க இதான் 2 காரணம்.. கேப்டன் தோனி ஏமாற்ற பேட்டி

“அது வேலையாகவில்லை எனில் நீங்கள் அடுத்ததை நோக்கி நகர வேண்டும். ஆனால் வாய்ப்பைப் பெறும் 4 வீரர்களும் ஒரே சமயத்தில் நன்றாக செயல்படவில்லையெனில் நீங்கள் மாற்றத்தை செய்ய வேண்டும். ஏனெனில் உங்களால் தோல்வியுடன் தொடர்ந்து நகர முடியாது. நாங்கள் போதுமான ரன்கள் அடிக்கவில்லை. அதுவே தற்போது வெற்றிக்கு தேவையானதாக இருக்கிறது. இந்த ஆட்டம் மாறியுள்ளது. அதனால் அனைத்து நேரங்களிலும் 180 – 200 ரன்களை அடிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் சூழ்நிலைகளை உணர்ந்து அதற்குத் தகுந்த ரன்களை அடிக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -