ப்ரேவிஸ் அசத்தியும் நல்ல பிட்ச்சில் சிஎஸ்கே தோற்க இதான் 2 காரணம்.. கேப்டன் தோனி ஏமாற்ற பேட்டி

Ms dhoni 25
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 25ஆம் தேதி சென்னையில் 43வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய சென்னை 155 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக அறிமுக வீரர் தேவாலட் ப்ரேவிஸ் 42, ஆயுஷ் மாத்ரே 30 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய ஹைதெராபாத் 18.4 ஓவரில் 155/5 ரன்களை எடுத்து தங்களுடைய 3வது வெற்றியை பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக இசான் கிசான் 44, கமிண்டு மெண்டிஸ் 32* ரன்கள் அடித்து புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேற உதவினர். சென்னைக்கு அதிகபட்சமாக நூர் அஹ்மத் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தங்களுடைய 7வது தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

சென்னை தோல்வி:

இந்தத் தோல்வியால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை 99% கோட்டை விட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியில் தேவால்ட் ப்ரேவிஸ் சிறப்பாக விளையாடியதாக கேப்டன் தோனி பாராட்டியுள்ளார். ஆனால் அவரைப் போல் மற்றவர்கள் விளையாடத் தவறியதும் பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா 20 ரன்கள் எடுக்கத் தவறியதும் தோல்விக்கு காரணமானதாகவும் தோனி ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம். முதல் இன்னிங்ஸில் பிட்ச் கொஞ்சம் நன்றாக இருந்தது. அதில் 155 என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய இலக்கு கிடையாது. ஏனெனில் அப்போது பந்து அதிகமாக சுழலவில்லை. ஆம் 10 ஓவர்களுக்குப்பின் அது இருதலைப்பட்சமாக மாறி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி செய்தது”

- Advertisement -

தோனி ஏமாற்றம்:

“ஆனால் மோசமாக ஒன்றும் மாறிவிடவில்லை. அது போன்ற சூழ்நிலையில் இன்னும் கொஞ்சம் அதிக ரன்கள் நாங்கள் அடித்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். ஆம் 2வது இன்னிங்ஸில் பிட்ச்சில் ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம் உதவி கிடைத்தது. எங்களுடைய ஸ்பின்னர்களிடம் தரம் இருக்கிறது. பந்து நின்று வந்த சமயத்தில் அவர்களும் சரியாக இடத்தில் பவுலிங் செய்தனர். ஆனால் நாங்கள் 15 – 20 ரன்கள் குறைவாக எடுத்தோம்”

இதையும் படிங்க: 4க்கு 4.. நொறுக்கப்பட்ட சேப்பாக்கம் கோட்டை.. வரலாறு காணாத 2 தோல்வியால் சிஎஸ்கே பிளே ஆஃப் உடைந்ததா?

“ப்ரேவிஸ் மிகவும் சிறப்பாக விளையாடினார். அவரைப் போலவே மிடில் ஆர்டரில் நாங்கள் விளையாடுவது அவசியமாகிறது. ஸ்பின்னர்கள் வந்த நேரத்தில் நாங்கள் கொஞ்சம் தடுமாறினோம். அந்த நேரத்தில் தான் நாங்கள் சரியான விஷயங்களை பின்பற்றி விளையாட வேண்டும் அல்லது உங்களது இடத்தில் பெரிய ஷாட்டுகளை அடிக்க முயற்சிக்க வேண்டும். அந்த விஷயத்தில் தான் நாங்கள் தடுமாறுகிறோம் என்று நினைக்கிறேன். எங்களால் அங்கே டாமினேட் செய்ய முடியவில்லை அல்லது ஸ்பின்னர்களுக்கு எதிராக மிடில் ஓவர்களில் நல்ல வேகத்தில் ரன்கள் அடிக்க முடியவில்லை” என்று கூறினார்.

Advertisement