ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 25ஆம் தேதி சேப்பாக்கத்தில் 43வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி சென்னைக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை மீண்டும் தடுமாற்றமாகவே விளையாடி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 30, தேவாலட் ப்ரேவிஸ் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஹைதராபாத் அணிக்கு அதிகபட்சமாக ஹர்சல் படேல் விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் விளையாடிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா 0, ஹெட் 19 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதே போல க்ளாஸென் 7, அன்கிட் வர்மாவை 19 ரன்னில் அவுட்டாக்கி சென்னை வெற்றிக்கு போராடியது.
வரலாறு காணாத 2 தோல்வி:
இருப்பினும் மறுபுறம் இசான் கிசான் நங்கூரமாக விளையாடி 44 (34) ரன்கள் எடுத்தார். அவருடன் மிடில் ஆர்டரில் கமிண்டு மெண்டிஸ் 32* (22), நிதிஷ் ரெட்டி 19* (13) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் 18.4 ஓவரிலேயே 155-5 ரன்களை எடுத்த ஹைதராபாத் தங்களுடைய மூன்றாவது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியது. சென்னைக்கு அதிகபட்சமாக நூர் அஹ்மத் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
இந்தப் போட்டியில் தங்களுடைய கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக முதல் முறையாக சென்னை தோற்றது. இதற்கு முன் இங்கு ஹைதராபாத்துக்கு எதிராக விளையாடிய 5 போட்டிகளிலும் வென்ற சென்னை தற்போது முதல் முறையாக தோற்றுள்ளது. இது போக சேப்பாக்கம் மைதானத்தில் இந்த வருடம் விளையாடிய 4 போட்டிகளிலும் சென்னை 4 தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது.
பிளே ஆஃப் முடிந்ததா:
இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு சீசனில் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக 10 போட்டிகளில் 8வது தோல்வியை சந்தித்த சென்னை வலுவாக 10வது இடத்தில் திண்டாடுகிறது. இதன் காரணமாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை சென்னை அணி 99% இழந்துள்ளது.
இதையும் படிங்க: வேணாம் சாமி.. கும்பிட்டு கேட்காத கோலி.. ஆலோசனை சொல்லும் அளவுக்கு பெரியவனில்லை என்று பேசிய டிகே
மோசமான ரன்ரேட் கொண்டிருப்பதன் காரணமாக அடுத்த 5 போட்டிகளில் வென்றாலும் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல 1% மட்டுமே வாய்ப்பிருக்கிறது. அதனால் வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் சென்னை அணி 2020, 2022 வருடங்களைத் தொடர்ந்து இந்த வருடமும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் 99% வெளியேறுவது உறுதியாகியுள்ளது. ஒரு காலத்தில் மிரட்டலாக விளையாடி தொடர் வெற்றிகளை பெறுவதற்குப் பெயர் போன சென்னை இந்த வருடம் இப்படி விழுந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



