- Advertisement -
ஐ.பி.எல்

அதை யார் பாத்துப்பா? ஐபிஎல் 2026 தொடரில் நீங்க விளையாடியே ஆகனும் என்ற ரசிகர் கோரிக்கைக்கு தோனி பதில்

ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்எஸ் தோனி விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. 2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்ட அவர் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். அதனால் இப்போதும் அவர் விளையாடுவதை கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள்.

இருப்பினும் 45 வயதை கடந்துள்ள அவரால் சமீப காலங்களாகவே அதிரடியாக விளையாட முடிவதில்லை. குறிப்பாக வயது காரணமாகவும் முழங்காலில் செய்துள்ள அறுவை சிகிச்சை காரணமாகவும் அவரால் முழுமையாக பேட்டிங் செய்ய முடியவில்லை. கடைசிக்கட்ட ஓவர்களில் களமிறங்கும் அவர் ஓரிரு சிக்சர்களை அடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்.

- Advertisement -

2026இல் கண்டிப்பாக விளையாடனும்:

இதற்கிடையே கடந்த 2 ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கே அணி சுமாராக விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதிப் பெறவில்லை. அதிலும் கடந்த வருடம் வரலாற்றில் முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த சிஎஸ்கே மோசமான சாதனையுடன் வெளியேறியது. எனவே அடுத்த வருடம் கம்பேக் கொடுப்பதற்காக தயாராகி வரும் சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாடுவாரா என்பது சந்தேகமாகும்.

இந்நிலையில் சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனியிடம் வழக்கம் போல அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுகிறீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கொடுத்த பதில் பின்வருமாறு. “நான் விளையாடுவேனா மாட்டேனா என்பது எனக்குத் தெரியவில்லை. அதை முடிவு செய்ய எனக்கு நேரம் இருக்கிறது. டிசம்பர் வரை எனக்கு நேரம் இருக்கிறது”

- Advertisement -

ரசிகர் கோரிக்கை:

“எனவே இன்னும் சில மாதங்கள் நேரத்தை எடுத்துக்கொள்ள இருக்கிறேன். அதன் பின் இறுதியான முடிவை எடுக்க உள்ளேன்” என்று கூறினார். அப்போது அரங்கத்தில் இருந்த ஒரு ரசிகர் “நீங்கள் கண்டிப்பாக விளையாட வேண்டும் சார்” என்று தோனியிடம் அன்பாக வேண்டுகோள். அதற்கு “என்னுடைய முழங்காலில் எனக்கு வலி இருக்கிறது. அதை யார் பார்த்துக் கொள்வது?” என்று சிரித்துக் கொண்டே அந்த ரசிகருக்கு பதிலளித்தார்.

இதையும் படிங்க: ரோஹித், கோலிக்கு உ.கோ வாய்ப்பிருக்கா தெரியல.. ஆனா இந்தியா அந்த கோப்பையை ஜெய்க்கும்.. கங்குலி கருத்து

கடந்த சில தினங்களுக்கு முன்பாக பங்கேற்ற நிகழ்ச்சியில் அடுத்த 15 – 20 வருடங்கள் சிஎஸ்கே அணியில் இருப்பேன் என்று தோனி கூறினார். அதற்காக அத்தனை வருடங்கள் விளையாடுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள் என தோனி தெரிவித்தார். மாறாக சிஎஸ்கே அணியில் ஆலோசகர் அல்லது பயிற்சியாளராக இருப்பேன் என்று அவர் மறைமுகமாக கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -