IPL 2023 : பாவம் அவரு, உண்மை தெரியாம பேசாதீங்க? நொண்டுகிறார் என தோனியை விமர்சித்த ஹெய்டனுக்கு பிளெமிங் பதில்

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற 17வது லீக் போட்டியில் சென்னையை 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ஜோஸ் பட்லர் 52, படிக்கல் 38, ஹெட்மயர் 30*, அஸ்வின் 30 என முக்கிய வீரர்களின் நல்ல ரன் குவிப்பால் 20 ஓவர்களில் 175/8 ரன்கள் சேர்க்க சென்னை சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா, ஆகாஷ் சிங் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 176 ரன்களை துரத்திய சென்னைக்கு ருத்ராஜ் ஆரம்பத்திலேயே 8 (10) ரன்னில் அவுட்டாக்கி ஏமாற்றினாலும் அடுத்து வந்த ரகானே 31 (19) ரன்களும் மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே 50 (38) ரன்களும் எடுத்து ஆட்டமிருந்தனர். ஆனால் மிடில் ஓவரில் சிவம் துபே 8 (9), மொயின் அலி 7 (10), ராயுடு 2 (1) என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர். அதனால் தடுமாறிய சென்னைக்கு கடைசி 5 ஓவரில் 63 ரன்கள் தேவைப்பட்ட போது தோனியும் ஜடேஜாவும் போராடியதால் கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

பவர் இல்லாத தோனி:
அதில் அடுத்தடுத்த ஒயிட் பந்துகளுடன் முதல் பந்தில் ரன்கள் கொடுக்காத சந்திப் சர்மாவை அடுத்த 2 பந்துகளில் தோனி சிக்சர்களாக பறக்க விட்டு 4வது பந்தில் சிங்கிள் எடுத்தார். 5வது பந்தில் ஜடேஜாவும் சிங்கிள் எடுத்ததால் கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது தோனி சிக்ஸர் அடிக்க முடியாத அளவுக்கு துல்லியமான யார்க்கர் பந்து வீசிய சந்திப் சர்மா த்ரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். முன்னதாக பொதுவாகவே தமக்கு நிகராக வேகமாக ஓடக்கூடியவர் என்று விராட் கோலி பாராட்டும் அளவுக்கு திறமை பெற்ற தோனி உள்வட்டத்திற்குள்ளேயே அடித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் டபுள் எடுப்பதில் வல்லவர்.

ஆனால் நேற்றைய போட்டியில் கடைசி 3 ஓவரில் அவர் ஒருமுறை கூட டபுள் எடுக்க முடியாமல் தவித்தார். அதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்களைப் போலவே அவருடன் சென்னைக்காக விளையாடிய முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நேரலை வர்ணனையில் தோனியிடம் பழைய பவர் இல்லை என்பது போல் அதிருப்தியை வெளிப்படுத்தியது பின்வருமாறு.

- Advertisement -

“தோனியிடம் ஏதோ ஒன்று தவறாக இன்றைய போட்டியில் அமைந்துள்ளது. பொதுவாக மின்சார வேகத்தில் ரன்கள் எடுக்க அவர் ஓடுவதை இன்று பார்க்க முடியவில்லை. குறிப்பாக கடைசி நேரங்களில் அவர் மிகவும் நொண்டுவதை நாங்கள் பார்த்தோம். எனவே இந்த கேள்விகளுக்கு எம்எஸ் தோனி அல்லது சென்னை அணியின் மருத்துவ குழுவினர் நேரடியாக பதிலளிப்பார்கள் என்று நம்புகிறேன்” என பேசினார்.

அந்த நிலையில் முழங்காலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு சிகிச்சை எடுத்து வருவதாலேயே வேகமாக ஓடினால் காயம் பெரிதாகிவிடும் என்ற காரணத்தால் தோனி டபுள் ரன்களை எடுக்கவில்லை என போட்டியின் முடிவில் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெளிவுபடுத்தியுள்ளார். முன்னதாக குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே கேட்ச் பிடிக்கும் போது முழங்காலில் காயத்தை சந்தித்த தோனி அதற்கான சிகிச்சை எடுத்து வருவதாக ஏற்கனவே அந்த போட்டியின் முடிவில் கூறியிருந்த பிளமிங் இது பற்றி நேற்று பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் முழங்கால் காயத்திற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். அதனால் அவருடைய வழக்கமான ஆட்டத்தில் சில வித்தியாசங்கள் இருப்பதை நீங்கள் பார்க்க முடிகிறது. அது சற்று அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் மிகவும் ஃபிட்டாக இருக்கும் அவர் ஒரு மாதத்திற்கு முன்பாகவே பயிற்சிகளை எடுத்து இத்தொடருக்கு வந்துள்ளார்”

இதையும் படிங்க:CSK vs RR : சி.எஸ்.கே அணியால் முடியாத விஷயத்தை செய்து வெற்றிபெற்ற ராஜஸ்தான் – வெற்றிக்கு இதுதான் காரணம்

“அவர் ஒரு சிறந்த வீரர். அவர் மீது எங்களுக்கு எப்போதும் சந்தேகமில்லை. இப்போதும் அவர் ஆச்சரியமான செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறார்” என்று கூறினார். அப்படி காயத்துடன் 41 வயதிலும் இந்தளவுக்கு சிறப்பாக விளையாடும் தோனியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகிறார்கள்.

Advertisement