CSK vs RR : சி.எஸ்.கே அணியால் முடியாத விஷயத்தை செய்து வெற்றிபெற்ற ராஜஸ்தான் – வெற்றிக்கு இதுதான் காரணம்

Ashwin
- Advertisement -

நடப்பு ஐ.பி.எல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கும் இடையேயான 17-வது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் தோனி தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தானி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இருந்து 175 ரன்கள் குவித்தது.

CSK vs RR

- Advertisement -

பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே குவித்ததால் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்தது. சேப்பாக்கம் மைதானத்தில் கடந்து 2008-ஆம் ஆண்டு வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி அதன்பிறகு இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது தான் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை வீழ்த்தியுள்ளது.

நேற்று ஒரு கட்டத்தில் சென்னை அணி முதல் பாதியில் மிகச் சிறப்பாக விளையாடி இருந்த வேளையில் கட்டாயம் இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிடில் ஓவர்களில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணயானது சென்னை அணி வீரர்களை அடுத்தடுத்து வீழ்த்தி போட்டியை சுவாரஸ்யமாக்கினர்.

Chahal

மேலும் இறுதிக்கட்டத்தில் தோனி மற்றும் ஜடேஜா இருந்தும் கூட அவர்களையும் தடுத்து நிறுத்தி ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் த்ரில் வெற்றி பெற்றது அனைவரது மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை அணி தவறவிட்ட ஒரு இடத்தை சரியாக பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றியும் பெற்றுள்ளது. அது குறித்து புள்ளி விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் நேற்றைய போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி சென்னை அணி 10 ஓவர்கள் வீசி 84 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியது.

இதையும் படிங்க : IPL 2023 : மும்பைக்கு பின் சிஎஸ்கே’வை அடக்கிய ராஜஸ்தான் – 15 வருடங்கள் கழித்து மகத்தான வரலாற்று சாதனை வெற்றி

அதே வேளையில் ராஜஸ்தான் அணியோ 12 ஓவர்களை முற்றிலுமாக சுழற்பந்து வீச்சாளர்களை வீசவைத்து 95 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது. இப்படி சென்னை மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப சுழற்பந்து வீச்சார்களை சரியாக பயன்படுத்தியதாலே ராஜஸ்தான் அணி சென்னை அணியை வீழ்த்தி இந்த போட்டியில் வெற்றி பெற்றது என இந்த புள்ளி விவரங்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement