IPL 2023 : மும்பைக்கு பின் சிஎஸ்கே’வை அடக்கிய ராஜஸ்தான் – 15 வருடங்கள் கழித்து மகத்தான வரலாற்று சாதனை வெற்றி

RR vs CSK Sandeep Sharma Holder Jaiswal Aadam Azampa
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 175/8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 52 ரன்களும் தேவதூத் படிக்கல் 5 பவுண்டரியுடன் 38 ரன்களும் அஸ்வின் மற்றும் ஹெர்மேயர் ஆகியோர் தலா 30 ரன்களும் அதிரடியாக எடுத்தனர்.

Jadeja

- Advertisement -

சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ் சிங் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 176 ரன்களை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் 8 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் டேவோன் கான்வேயுடன் 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய அஜிங்கிய ரகானே 2 பவுண்டரி 1 சிக்ருடன் 31 (19) ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் மிடில் ஓவர்களில் சிவம் துபே 8 (9), மொயின் அலி 7 (10), ராயுடு 1 (2) என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தினார்கள்.

மகத்தான வெற்றி:
போதாக்குறைக்கு மறுபுறம் போராடிய டேவோன் கான்வேயும் 50 (38) ரன்களில் ஆட்டமிழந்ததால் திணறிய சென்னைக்கு கடைசி 5 ஓவரில் 63 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தோனியும் ஜடேஜாவும் இணைந்து முடிந்தளவுக்கு போராடி அதிரடியாக செயல்பட்டு போராடியதால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. அதில் அடுத்தடுத்த ஒயிட் பந்துகளுடன் ஆரம்பித்த சந்திப் சர்மா முதல் பந்தில் சிங்கிள் கொடுக்கவில்லை. ஆனால் அடுத்த 2 பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்ட தோனி 4வது பந்தில் சிங்கிள் எடுக்க 5வது பந்தில் ஜடேஜாவும் சிங்கிள் எடுத்தார்.

Sandeep Sharma 1

அதனால் கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸர் பறக்க விட காத்திருந்த தோனியை துல்லியமான யார்க்கர் பந்து வீசிய சந்திப் சர்மா தடுத்து நிறுத்தி சேப்பாக்கம் ரசிகர்களின் மனதை உடைத்து த்ரில் வெற்றியை பெற்று கொடுத்தார். அதனால் 32* (17) ரன்கள் எடுத்த தோனி 25* (15) ரன்கள் எடுத்த ஜடேஜாவின் போராட்டம் வீணானது. மறுபுறம் பந்து வீச்சில் அதிகபட்சமாக சஹால் போலவே 2 விக்கெட்களை எடுத்தது மட்டுமல்லாமல் பேட்டிங்கில் 30 (22) ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய தமிழகத்தின் லெஜெண்ட் அஷ்வின் ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

இருப்பினும் இப்போட்டியில் 200வது முறையாக கேப்டனாக வழி நடத்திய தோனி தலைமையில் சென்னை நூலிலையில் வெற்றியை தவற விட்டது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் இதுவரை 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்விகளை பதிவு செய்வதற்கு சென்னை புள்ளி பட்டியலிலும் 5வது இடத்தில் தடுமாறுகிறது. ஆனால் அந்தளவுக்கு முக்கிய நேரங்களில் கச்சிதமாக செயல்பட்ட ராஜஸ்தான் சென்னையை அதன் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 10 வருடங்களில் தோற்கடித்த 2வது அணியாக அசத்தியுள்ளது.

Sandeep-Sharma

கடந்த 10 வருடங்களில் சேப்பாக்கத்தில் விளையாடிய 23 போட்டிகளில் மும்பை மட்டுமே 3 முறை சென்னையை தோற்கடித்துள்ளது. எஞ்சிய 19 போட்டிகளில் தோனி தலைமையில் சென்னை வெற்றி நடை போட்டு வந்தது. ஆனால் நேற்றைய 23வது போட்டியில் மும்பையை தொடர்ந்து சென்னையை சேப்பாக்கத்தில் தோற்கடித்த அணியாக ராஜஸ்தான் சிறப்பான வெற்றி பெற்றது. அதை விட 15 வருடங்கள் கழித்து முதல் முறையாக சென்னையை அதன் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் நேற்று தோற்கடித்துள்ளது.

இதையும் படிங்க: CSK vs RR : தோனிக்கு எதிராக நான் கடைசி ஓவரில் வச்சிருந்த பிளானே இதுதான் – சந்தீப் சர்மா பேட்டி

இதற்கு முன் ஐபிஎல் துவங்கப்பட்ட கடந்த 2008ஆம் ஆண்டு ஜாம்பவான் ஷேன் வார்னே தலைமையில் முதலும் கடைசியுமாக தோனி தலைமையிலான சென்னையை சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் தோற்கடித்திருந்தது. அதை தொடர்ந்து தற்போது 15 வருடங்கள் கழித்து அந்த அணி மகத்தான வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ள காரணத்தால் 2008 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ராஜஸ்தான் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement